- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட* பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப* ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்* இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்* திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.
காணொளி
பதவுரை
நெல் தொடுத்த நீலம்மலர்நிறைந்த சூழல் - நெற்கதிர்களின்மேல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட கரு நெய்கற் பூக்களாலே நிறைந்துள்ள சுற்றுப்புறங்களில்
இரு சிறைய வண்டஒலியும் - அழகிய சிறகுகளையுடைய வண்டுகளின் ஆரவாரமும்
நெடு கண்ணார்தம் சிறு அடிமேல் சிலம்பு ஒலியும் - நீண்ட கண்களையுடையரான மாதர்களது சிறிய பாதங்களிலணிந்த தண்டைகளினுடைய ஓசையும்
மிழற்று - தொனிக்கப்பெற்ற
விளக்க உரை
(அன்புடையவள் போலக் கண்ணனது வாயில்) வைத்திட, ஆரும் பேணாநஞ்சு உண்டு உகந்த பிள்ளைகண்டீர் – ஒருவரும் விரும்பமாட்டாத விஷத்தை (முலைப்பாலுடனே) பருகி ஸந்தோஷமடைந்தசிறுவன் காண்மின்.
English Translation
See, the Lord who came as a child and took great relish in the detestable poison on the breast of the beautifully disguised ogress, is my senkanmai who resides of Nangur, -where the hum of bees hovering over festoons of paddy sheats and blue lotuses and the tinkle of the ankle bells on the feet vel-eyed damages mingle, -in his temple of Tirutetri Ambalam.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்