விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*  வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை* 
  கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை*  கரு முகில் திரு நிறத்தவனை*
  செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேம் சினம் களிறு வெகுண்டும் - வெவ்விய கோபத்தை யுடைத்தான (குவலயா பீடமென்னும்) யானையைச் சீறி முடித்தும்,
வில் இறுத்து மல்லும்அடர்ந்தவன் தன்னை - (கம்ஸன் பூஜையின் வைத்திருந்த) வில்லை முறித்தும் மல்லர்களையும் முடித்தவனாய்
கஞ்சனை காய்ந்த காளை - கம்ஸனைக் கோபித்து முடித்த யுவாவான
அம்மானை - ஸ்வாமியாய்
கருமுகில் திரு நிறத்தவனை - காளமேகத் திருவுருவனாய்

விளக்க உரை

முதலடியில், வெகுண்டு, இறுத்து, அடர்ந்து என்பவை முறைமுறையே களிற்றிலும் வில்லிலும் மல்லிலும் இயையக் கடவன: களிற்றை வெகுண்டவன், வில்லை இறுத்தவன், மல்லை அடர்த்தவன் என்க. இம்மூன்று காரியங்களும் கம்ஸவதத்திற்கு முந்துற முன்னம் நடந்தவை.

English Translation

The strong rutted elephant, the bow and the, wrestler, met with their ends through my dark Lord. Even the terrible Kamsa did fall to the wrath of my dark and noble Lord. Soft spoken Vedic Seers, residing in Nangur, -Semponsei koyil is their midst, seeing my precious Lord, dark as a mountain, I have found my spiritual elevation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்