விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வல்லாள் இலங்கை மலங்கச்*  சரந் துரந்த* 
    வில்லாளனை*  விட்டுசித்தன் விரித்த*
    சொல் ஆர்ந்த அப்பூச்சிப்*  பாடல் இவை பத்தும் 
    வல்லார் போய்*  வைகுந்தம் மன்னி இருப்பரே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல்லாள் - பலசாலிகளான வீரர்களையுடைய;
இலங்கை - லங்கையானது;
மலங்க - பாழாம்படி;
சரம் துரந்த - அம்பைச் செலுத்திய;
வில் ஆளனை - வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி;

விளக்க உரை

சொல்லார்ந்த பாடலிவை பத்தும் = இத்திருமொழியில் அர்த்தத்தைக் கவனிக்கவேணுமென்கிற கஷ்டமும் வேண்டா; சொல்லே பரமபோக்யம் என்று கருத்து. இச்செய்யுள் வெண்டளையால் வந்த தரவுகொச்சகக் கலிப்பாவாதலால் “விட்டுசித்தன் விரித்தன” என்று பாடமானால் தளைக்குப் பொருந்தும். ??? - வடசொல். அடிவரவு:- மெச்சு மலை காயும் இருட்டு சேப்பூண்ட செப்பு தத்துக் கொங்கை பதகம் வல்லாள் அரவணை.

English Translation

This decad of Appuchi songs by Vishnuchitta sing the praise of the bow-wielding Lord who rained arrows and burnt the Rakshasa’s Lanka. Those who master it will go and live in Vaikuntha forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்