விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை*  பேதியா இன்ப வெள்ளத்தை* 
    இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை*  ஏழ் இசையின் சுவைதன்னை* 
    சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மறைப் பெரும் பொருளை வானவர்கோனை*  கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை - பிறப்பு கிழத்தனம் முதலிய வாகாரங்களொன்று மில்லாதவனாய்
பேதியா இன்பம் வெள்ளத்தை - என்றுமொருபடிப்பட்ட ஆநந்தக்கடலாய் இருப்பவனாய்
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை - மூன்று காலங்களிலும் உள்ளவனாய்
ஏழ் இசையின் சுவைதன்னை - ஸப்தஸ்வரங்களினுடைய ரஸம்போல் போக்யனாய்

விளக்க உரை

பேதியாவின்ப வெள்ளத்தை – ஆநந்த முடைமை ஜீவாத்மாவுக்கு மிருந்தாலும் பிரகிருதி ஸம்பந்தத்தாலே அதற்குக் குறைவு உண்டாகிறது; இப்படியல்லாமல் எம்பெருமானுடைய ஆநந்தமயத்வம் ஒரு உபாதியினாலும் பேதப்படாதிருக்குமென்க. பேதியா – பேதியாத; விகாரமடையாத. இன்பவெள்ளத்தை – இன்பவெள்ளமே ஸ்வரூபமாயுள்ளவனை. எம்பெருமான் இன்னகாலத்திலுள்ளான், இன்ன காலத்திலில்லை என்னவொண்ணாதபடி எக்காலத்தும் உள்ளமைபற்றி ‘இறப்பெதிர் காலக் கழிவுமானானை’ என்றது. ‘கழிவும்’ என்றது – கழிந்துகொண்டே செல்லுகிற நிகழ்காலத்தைச் சொன்னபடி. ஏழிசையன் சுவை தன்னை - ஸப்தஸ்வரங்களிலுமுண்டான ரஸமே ஒருவடிவு கொண்டாற்போல் பரமபோக்யனானவனை.

English Translation

Birth, death or old age, he doesn't have any, flooded in the constant joy of his being. Present in the past and future and present too, he is in the delectable sound of the spheres, Qualified Vedic seers residing in Nangur, -Semponsei Koyil is amid them. Seeing the Vedic Lord, king of the celestials, I have found my piritual elevation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்