விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்*  பேர் அருளாளன் எம் பிரானை*
    வார் அணி முலையாள் மலர்மகளோடு*  மண்மகளும் உடன் நிற்ப* 
    சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கார் அணி மேகம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகத்தவர் பேர் அணிந்து - இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனஞ் செய்துகொண்டு
தொழுது ஏத்தும் பேரருளாளன் - அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய்
எம்பிரானை - எமக்கு ஸ்வாமியாய்
கார் அணிமேகம் நின்றது ஒப்பானை - மழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை
சீர் அணிமாடம் நாங்கை நல்நடுவுள் - அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே

விளக்க உரை

பிராட்டிக்கு ‘வாரணிமுலையாள்’ என்று இட்ட விசேஷணம் அவளுடைய நித்யயௌவனத்தைக் காட்டுதற்கென்க. நாங்கைநன்னடுவுள் - ‘செம்பொன்செய்கோயில்’ என்னுந் திருப்பதி திருநாங்கூரில் நட்டநடுவில் உள்ளது; இவ்வாழ்வார்தாமும் இத்திருப்பதியின் மங்களாசரஸநபரமான இத்திருமொழியைத் திருநாங்கூர்ப்பதிகங்கள் பதினொன்றின் நன்னடுவே அமைத்தருளின அழகும் ஆராயத்தக்கது. “நந்தாவிளக்கே” என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளைக் கவிபாடுவன; அவற்றுள் கீழே ஐந்து திருமொழிகள் சென்றன; மேலே ஐந்து திருமொழிகளுள்ளன; இத்திருமொழி நன்னடுவே உள்ளது எனக்காண்க.

English Translation

The world comes, to worship in tumultuous multitudes, my benevolent Lord Per-Arulalan, with corsetted-breast dame, sitting on a lotus, and Dame of-the-Earth by the side of him. Splendorous mansions all around Nangur, -Semponsel Koyil is amid them. Dark as the rain cloud, seeing the good Lord, I have found my spiritual elevation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்