விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உளைய ஒண் திறல் பொன்பெயரோன்*  தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
  வெம் சினத்து அரி பரி கீறிய*  அப்பன் வந்து உறை கோயில்*
  இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு*  எழில் கொள் பந்து அடிப்போர்*
  கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒண் திறல் பொன் பெயரோன் உளைய - பிரஸித்தமான வலிவையுடையனான இரணியனானவன் நோவுபடும்படி
தனது உரம்பிளந்து - அவனுடைய மார்பைக் கிழித்து
உதிரத்தை அளையும் - (அவனது உடலில் நின்று இழிந்த) ரத்தத்தை அளைந்த
வென் சினத்து அரி - உக்ரஸிம்ஹனானவனும்
பரி கீறிய - குதிரைவடிவு கொண்டுவந்த கேசியென்னும் அசுரனைக் கொன்றவனுமான

விளக்க உரை

திருநாங்கூரில் சிறுமிகள் நர்த்தமனமாடுவார் சிலரும் பந்தடிப்பார் சிலருமாயிருக்கையாலே அன்னவர்களது காற்சிலம்புகளின் ஒலியும் கைவளைகளின் ஒலியுமே ஓங்கி மற்ற நகர கோஷங்களைக் கீழ்ப்படுத்தி நிற்குமென்று நகர்ச்சிறப்பு சொல்லிற்றாயிற்று, பின்னடிகளில்

English Translation

The Lord who came as a fierce man-lion and destroyed the Asura Hiranya by tearing into this chest with his blood-dripping claws, is my father, who ripped the horse's jaws. He resides at Nangur, -where the sounds of anklets and bangles of the girls playing ball never ceases, -in the temple of Van-Purushottamam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்