விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பதக முதலை*  வாய்ப் பட்ட களிறு* 
    கதறிக் கைகூப்பி*  என் கண்ணா! கண்ணா! என்ன*
    உதவப் புள் ஊர்ந்து*  அங்கு உறுதுயர் தீர்த்த* 
    அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பதகம் - பாதிக்குந் தன்மையையுடைய;
முதலை - முதலையில்;
வாய் - வாயிலே;
பட்ட - அகப்பட்ட;
களிறு - ஸ்ரீகஜேந்த்ராழ்வான்;

விளக்க உரை

பதகம் - ஸாயக்ஷ என்ற வடசொல் விகாரம்; ??? என்பதன் (குறுக்கல்) விகாரமெனக் கொண்டால் (சாபமாகிற) பாபத்தையுடையவனென்று பொருளாம். உறுதுயர் - ப்ரயாஸப்பட்டுப் பறித்த பூ பயனற்றுப் போகின்றதே என்னுந் துயர்; “உயிர்போகிறதே” என்ற துயரன்று. உறு - மிகுதியைக் குறிப்பதோர் உரிச்சொல். களிறு - யானையின் ஆண்மைப்பெயர்; (பெண்மைப் பெயர் - பிடி). களி - மதக்களிப்பு; அதனையுடையது - களிறு எனக் காரணக்குறி; று - பெயர்விகுதி; ஒன்றன்பால் விகுதியெனக் கொள்ளலாகாது; பால்பகா அஃறிணைப் பெயராதலால். அதன் - ஹதகன்; ஆச்ரிதவிரோதியை ஹதம்பண்ணுமவன்.

English Translation

The elephant caught in the jaws of the vicious crocodile bellowed folded hands and cried, “Krishna, O My Krishna, Help!” My Lord and master drove his bird Garuda thither and saved him from distress.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்