விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓடாத ஆளரியின்*  உரு ஆகி இரணியனை*      
    வாடாத வள் உகிரால்*  பிளந்து அளைந்த மாலது இடம்*
    ஏடு ஏறு பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சேடு ஏறு பொழில் தழுவு*  திருத்தேவனார்தொகையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓடாத ஆள் அரியின் உரு ஆகி - நாட்டில் நடமாடாமல் அபூர்வமான நரஸிம்ஹ மூர்த்தியாகி
வாடாத வள் உகிரால் - வளையாத கூர்மைமிக்க நகங்களினால்
இரணியனை பிளந்து அளைந்த மாலது - ஹிரண்யாஸுரனைக் கிழித்து (ரத்தப்பெருக்கிலே) அளைந்து கொண்டிருந்த எம்பெருமானுடைய
இடம் - திருப்பதி (எதுவென்றால்)
ஏடு ஏறு பெரு செல்வத்து - புத்தகங்களிலே எழுதி வைக்கத்தக்க மிகுந்த ஐச்வரியத்தை யுடையராய்

விளக்க உரை

ஏடேறு பெருஞ்செல்வத்து – எம்பெருமானுடைய பெருமையளை ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ பாரதம் முதலிய இதிஹாஸங்களாக ஏடுபடுத்தி வைத்திருப்பது போலப் புத்தகங்களாக எழுதி வைக்கத்தகுந்த பெருஞ்செல்வமுடையார் திருநாங்கூர்வைதிகர்கள் என்கை. ஏடு என்று குற்றத்திற்கும் வாசகமாகையாலே குற்றமற்ற பெருஞ்செல்வத்தினர் என்று முரைப்பர். ஏறுகை – மாண்டுபோகை.

English Translation

The Lord, who came as a wonder-man-lion and tore apart the Asura Hiranya’s chest with sharp claws, resides at Nangur among bright Vedic seers, --whose wealth of knowledge should go on record, --amid the fragrant groves in Tiruttevanar Togai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்