விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொங்கை வன்*  கூனிசொற் கொண்டு குவலயத்* 
    துங்கக் கரியும்*  பரியும் இராச்சியமும்* 
    எங்கும் பரதற்கு அருளி*  வன்கான் அடை* 
    அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கை - (முதுகில்) முலையெழும்பினாற் போன்ற;
வல் - பலிஷ்டமான;
கூனி - கூனையுடையளான மந்தரையினுடைய;
சொல் - சொல்லை;
கொண்டு - அங்கீகரித்து;

விளக்க உரை

ஒற்றுமைநயத்தால் ராமக்ருஷ்ணரிருவரையும் ஒருவராகவே கொண்டு ஆழ்வார் இங்ஙனருளிச் செய்கின்றனரென்க. கொங்கை - கூனுக்கு அடைமொழி; வல் - கூனிக்கு அடைமொழி. பெருமாளுடைய வந: ரைக்கு மூலகாரணம் கூனியானமை பற்றிக் ‘கூனி சொற்கொண்டு’ என்றார். குவலயத்துங்கக்கரி - வடசொற்றொடர். இராச்சியம் - ??? வட சொல் திரிபு. (அங்கண்ணன்) கண் - தயையாகவுமாம்; பட்டாபிஷேகத்துக்காகக் கட்டின காப்போடே காட்டுக்குப்போகச் சொன்னபோதும் முகங்கருகாமல் மலர்ந்து முடிதவிர்ந்து சடை புனைந்து நாட்டைவிட்டுக் காட்டுக்குப்போன பெருமாளுடைய மஹாகுணத்தை வியந்து அவனது தயையை அழகியதாகக் கொண்டாடுகிறபடி

English Translation

Listening to the hard-hearted kuni’s words, the Lord of beautiful eyes went into the forest granting his prized elephants, steeds, kingdom and all else to Bharata. He comes as a child and shows ‘Fear

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்