விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தத்துக் கொண்டாள் கொலோ?*  தானே பெற்றாள் கொலோ?* 
  சித்தம் அனையாள்*  அசோதை இளஞ்சிங்கம்*
  கொத்து ஆர் கருங்குழற்*  கோபால கோளரி* 
  அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
   அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தானே பெற்றாள் கொலோ - ஸ்வயமாகவே மெய்நொந்து பெற்றெடுத்தாளோ;
சித்தம் அனையாள் - (கண்ணனுடைய) மனக்கருத்தை ஒத்து நடப்பவளாகிய;
அசோதை - யசோதையினுடைய;
இளசிங்கம் - சிங்கக்குட்டி போன்றவனும்;
கொத்து ஆர் கருகுழல் - பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்;

விளக்க உரை

யசோதைப் பிராட்டி ப்ரஸவிக்குங் காலத்திலே அருகிலிருந்தவர்கள் ‘இவன் தத்தபுத்ரஸ்வீகாரம் செய்யவில்லை; ஆனால் இவள் பிள்ளை பெறுகிறபோது இவளைப் பேணிப்பார்த்திருந்த நாங்கள் அப்போதாக அயர்ந்து தூங்கிவிட்டபடியால் பிள்ளை பெற்றதையுங் கண்டிலோம்; (???? என்று - யசோதையும் அப்போது மோஹித்துக் கிடந்து உணர்ந்த பின்னறே இவனைக்கண்டது) உணர்ந்தபின்பு இவள் ‘நான் பெற்றேன்’ என்று சொல்லக் கேட்டோம்’ என்று சொல்லும்படியாக ஸ்ரீக்ருஷ்ணன்தோன்றினனாதலால் தத்துக்கொண்டாள் கொலோ, தானே பெற்றாள் கொலோ என்றனர்; அன்றியும் இக்கண்ணபிரானுடைய லோகவிலக்ஷணமாய் அதிமாநுஷமான குணசேஷ்டி தங்களைக் கண்டவர் இப்பிரானை இவள் பிள்ளை யென்று சொல்லமுடியாதபடியும் யசோதை தானும் “இம்மாயம் வல்லபிள்ளை நம்பி! உன்னை என் மகனே யென்பர் நின்றார்” என்று சொல்லும் படியும் ஸ்ரீக்ருஷ்ணனிருப்பதும் இவ்வாறு கூறுதற்குக் காரணமாகும். பிறர்க்கு அடங்காமையும் செருக்கும்பற்றி கண்ணனுக்குச் சிங்கக்குட்டி உவமை ; தாய்க்கு அடங்காதவன் ஊர்க்கு அடங்கானாதலால் ‘அசோதையிளஞ்சிங்கம் கோபாலகோளரி’ என்றார். தத்து - ??? என்ற வடசொற்சிதைவு. கொல் - இடைச்சொல்; ஐயப்பொருளது. சித்தம் - ??? கோபாலர் + கோளரி = இடையுரி வடசொலினியம்பிய கொளாதவும். . . யாவர்க்கு நெறியே என்ற புறனடைச் சூத்திரமறிக. (‘சில விகாரமாமுயர்திணை’ என்பதும் விதியாம்.) காள் - மிடுக்கு; முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

English Translation

The lion-cut of Yasoda of agreeable heart, wears flower bunches in his dark curls; wonder, was he born to her, or did she adopt him? He is the brave lion among the cowherd flok, our Lord and master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்