விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு*  மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி* 
  எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்*  ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
  செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப*  சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து* 
  மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர்  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வங்கம் மலி தட கடலுள் - மரக்கலங்கள் நிறைந்து கிடக்கிற பெரிய திருப்பாற்கடலிலே
வானவர்களோடு மா முனிவர் பலர்கூடி - தேவர்களும் மஹர்ஷிகளும் பலர் ஒன்றுகூடி
மா மலர்கள் துவி - சிறந்த புஷ்பங்களைப் பணி மாறி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் - எங்களுக்கு அத்விதீய நாதனானவனே! எமக்குக் கிருபை பண்ணவேணும் என்று வேண்டப்பெற்ற

விளக்க உரை

English Translation

Then in the yore, the Lord was worshipped in the far of Ocean of milk, by hordes of celestials and bards, with choicest flowers, singing, “Our Lord, our one and only refuge, grace us!”. He resides permanently in Nangur where red Kayal-fish, Valai-fish and Sel-fish dance in the water-fields and the streets are lined with mansions that caress the under-belly of the Moon in the sky. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்