விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த*  அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்* 
  கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்*  குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
  மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி*  மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப* 
  மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாறாத மலர் கமலாம்- மாறாத மலரையுடைய தாமரைகள்
செங்கழுநீர் - செங்கழுநீர்ப்பூக்கள் (ஆகிய இவற்றில் நின்று)
மது வெள்ளம் ததும்பி ஒழுக உழவர் - தேன் வெள்ளமானது இடைவிடாது பாய்வதனால் பயிர்த் தொழில் செய்பவர்கள்
வுயல் மடை அடைப்பு - (தங்கள் தங்கள்) கழனி மடைகளை யடைக்கப் பெற்றதும்

விளக்க உரை

“மாறாத பெருஞ் செல்வம் வளரும் என்ற விடத்திற்கு வியாக்கியானமருளாகியானமருளாநின்ற பெரிவாய்ச் சான்பிள்ளை- “அங்கே உடைந்தது கிடாய் இங்கே உடைந்தது கிடாய் ஸஹ்யப் பெருக்குக்கிடாய் என்று கூப்பிடுகிற ஆரவாரமேயாய்க் கிடக்குமாயிற்று” என்றளிச்செய்யுமழுகு காண்மின்.

English Translation

Then in the yore the mighty armed Lord wielded his sharp discus and destroyed the angry Narakasura. He gives the pleasure of his body to lotus-dame Lakshmi and to Siva in equal measure. He is the Lord of gods. He resides permanently amid wealth in Nangur, where unfading lotus and red water lilies grow in thickets, spilling Waves of overflowing nectar that makes the farmers close their sluices. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்