விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்*  பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு* 
  திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்*  தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
  உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்*  உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்*  பெரிய 
  வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல்களைகள் - (அந்த வேதங்களுக்கு வியாக்கியாமான) சிறந்த அதிஹாஸ புராணுதிகளென்ன (இவற்றறையும்)
நிறை - நிறைந்து கிடக்கிற
பொறைகள் - பொறுமை முதலிய குணங்களென்ன
உதவ கொடை - கேட்டார்கேட்டபடி கொடுக்கும் ஔதார்யமென்ன
என்று இவற்றின் ஒழிவு இ;ல்லா - ஏன்றிவை முதலான குணங்களையும் எப்போதும் உடையவர்களாய்

விளக்க உரை

மூன்றாம்மடியில் உதவு கொடை” என்றதற்க்கும் நான்குமடியில் “வண்மை மிகு” என்றதற்கும் வாசி ஏதேனில் : யாசாகரிகளுக்கு தவம் பண்ணுகிறபடியைச் சொல்லு முன்நாம்மடி எம்பெருமானிடத்தில் ஆத்மஸர்பணம் பண்ணிபடியைச் சொல்வது நான்காமடி என்று வாசி காண்க.

English Translation

Then in the yore, the Lord of gods sucked the ogress Putana’s breasts and destroyed her, he toddled between Marudu trees and destroyed them, he smote a devil cart and destroyed it. He resides permanently in Nangur where Vedic seers of great merit, adept in the four Vedas and their various sections, who cultivate tolerance, generosity and helpfulness, live in large numbers. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்