விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செப்பு இள மென்முலைத்*  தேவகி நங்கைக்குச்* 
    சொப்படத் தோன்றி*  தொறுப்பாடியோம் வைத்த* 
    துப்பமும் பாலும்*  தயிரும் விழுங்கிய* 
    அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செப்பு - ஸ்வர்ணகலசங்கள் போன்ற;
இன்மெல் முலை - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய;
தேவகி நங்கைக்கு - தேவகிப் பிராட்டிக்கு (மகனாக);
சொப்பட தோன்றி - நன்றாகப் பிறந்து;
தொறுப்பாடியோம் - ஆய்ப்பாடியிலுள்ளவர்களுகாகிய நாங்கள்;

விளக்க உரை

செப்பு - முலைகளுக்கு நிறத்திலும் வடிவிலும் உவமை. சொப்படத் தோன்றி - ஸர்வேச்வரத்வசின்னங்களோடு தோன்றி தொறு - பசு பாடி - இடம்; எனவே பசுக்கூட்டங்கள் நிரம்பிய ‘கோகுலம்’ என்று ப்ரஸித்தி பெற்ற திருவாய்ப்பாடியாயிற்று. சில ஆய்ச்சிமார் எங்களுடைய இறுகின நெய்யையும் காய்ந்த பாலையும் தோய்ந்த தயிரையும் கண்ணன் உண்ணப் பெற்றோமே! என்றீடுபட்டு ‘அப்பன்’ என்றனரென்க.

English Translation

Our Lord was born to the red supple-breasted maid Devaki and appeared before her in all his grandeur. He came to live among us cowherd folk, and ate up all our milk, curds and Ghee. He comes as a ch

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்