விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க*  தேவரொடு தானவர்கள் திசைப்ப*
  இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்* 
  எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்*  ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்* 
  மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எழில் விளங்கும் மறையும் - அழகு விளங்காநின்ற வேதங்களும்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரு குணத்தோர் - ஸ்தப ஸ்வரங்களும் வேதார்ந்த சரவணங்களும் பொருந்திய மஹா குணசாலிகளாய்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்து நாங்கூர் - பூமிக்குள் சிறப்புப் பெற்ற வைதிக ப்ராமணர்கள் நிறைந்திருக்கப் பெற்ற திருநாகூரில்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் - வைகுந்த விண்ணகரம் மட நெஞ்சே வணங்கு

விளக்க உரை

English Translation

Then in the yore the Lord came as a strong man-lion, feared by the Quarters and revered by the gods and Asuras. He took the mighty Hiranya and tore his chest apart. He resides permanently in Nangur where the rich chants of the Vedas, the Prasnas and the seven Svaras of music fill the air, and where Vedic seers of great merit live in close harmony. Offer worship to him in the temple of Vaikunta Vinnagaram, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்