விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*  துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
    முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*  விளைவித்த அம்மான் இடம்*
    வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று*  மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்* 
    வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிற்றில் சிதைத்தும் - (அவர்களிழைக்கிற) சிறு மணல் வீடுகளை அழித்தும்
முற்றா இளையார் விளையாட்டொடு - முற்றுதலில்லாத இளம் பெண்களுக்கு லீலா ரஸத்தையும்
காதல் வெள்ளம் - ஆசைப்பெருக்கையும்
விளைவித்த அம்மான் - உண்டாக்கின பெருமானுடைய
இடம் - இருப்பீடமாய்;

விளக்க உரை

“துளையார் கருமென் குழலாய்ச்சியர்” என்ற தொடர்க்கு மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம்; துளைகள் நிறைந்த கரிய மெல்லிய புல்லாங்குழல் போல் இனிய குரலுடைய ஆய்ச்சியர் என்பது ஒருவகை; (நீரிற்படிந்து) துளைதற்கு நிறைந்துள்ள கரிய மெல்லிய கூந்தலையுடைய ஆயச்சியர் என்பது மற்றொருவகை. துளைகள் பொருந்திய கரிய மெல்லிய குழலின் பெயரையும் (அதன் அடைமொழிகளையும்) தங்கள் கூந்தலையுடைய ஆய்ச்சியர் என்பது இன்னொருவகை. இவற்றுள், முதற்பொருளில் ‘குழல்’ என்னுஞ் சொல் உபமானத் தளவிலே நில்லாமல் உபமேயமான குரலையும் உணர்த்தினது ஆகுபெயரால். இரண்டாம் பொருளில் துளை என்னும் வினைப்பகுதியே தொழிற் பெயர்ப் பொருள் தந்தது; முதனிலைத் தொழிற்பெயர். மூன்றாம் பொருளிற் சில விஷயங்கள் குறிக் கொள்ள வேண்டியவை யுண்டு; கேண்மின்; தமிழில் ஒரு பதத்திற்கு இரண்டு பொருள் இருந்தால் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழிகளை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு; (உதாரணம்.) ‘வஞ்சி’ என்னுஞ் சொல் வஞ்சிமரத்ததையும் சேரன் ராஜதானியாகிற வஞ்சி மாநகரத்தையும் பொருளாகவுடையது. வஞ்சிமரத்தைக் கூற வேண்டுங்கால் உபயோகப்படுத்தக்கூடிய இலை, காய், கொடி முதலிய அடைமொழிகள் வஞ்சிமாநகரைக் கூறுங்கால் உபயோகப் படடாவாயினும் கவிகள் பிரயோகத்தில் உபயோகிப்பதுண்டு; “நெட்டிலை வஞ்சிக்கோ’ என்றவிடத்தும், “புல்லிலைவஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை” என்றவிடத்தும் வருக்ஷவிசேஷப் பொருட்கு உரிய ‘நெட்டிலை’ ‘புல்லிலை’ என்னும் அடைமொழிகளை அம்மரப் பெயர்கொண்ட வஞ்சி மாநகர்க்கும் ஏற்றியுள்ளமை காண்க. ‘நாகம்’ என்னுஞ்சொல் புன்னை மரத்திற்கும் பாம்புக்கும் பெயர்; பரிபாடலில் நாகமென்று சொல்லையிட்டுப் புன்னைமரத்தை வருணிக்குங்கால் பாம்புக்கு உரிய அடைமொழிகளைப் புன்னைக்கு இட்டனர். “ஒளிதிகழ் உத்தி உருக்கெழுநாகம்” (பரிபாடல் 12.) என்றது காண்க. இங்ஙனே பல உண்டு. அப்படியே இங்கும் புல்லாங்குழலுக்கு இணங்கக்கூடிய அடைமொழிகள் அதன் பெயர்பூண்ட கூந்தலுக்கு ஏற்றப்பட்டன வென்க. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்- “துளையாரென்று துளைமிக்கிருக்கை; அதாவது சுருண்டு கருத்த ம்ருதுவான் குழலையுடையராய்” என்றருளிச் செய்திருக்கக் காண்கிறோம். கூந்தல் சுருண்டிருக்கும் நிலைமையில் துளைகள் தென்படுதல்பற்றி இங்ஙனே உரைத்தருளினர்போலும்.

English Translation

Then in the yore the Lord stole the clothes of the dark curly tressed cowherd-dames, broke the sand castles of tender unripe girls and caused a flood of love. He resides in Nangur where long-Vel-eyed dames with bright sparkling teeth recite catches, from Vedas and hearing them, their curved-mouth-parrots repeat them tenderly in sweet musical tones. Offer worship in Manimadakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்