விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*  இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து* 
  தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து*  தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*
  குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே*  குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு* 
  மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உண்டிட்டு - (அவளுயிரோடு கூட) உண்டவனாரையும்,
இளகன்று கொண்டு - வத்ஸாஸூரனை (எறிதடியாக)க் கொண்டு
விளங்காய் எறிந்து - கபித்தாஸூரன்மேல்சுழற்றி யெறிந்து இருவரையும் முடித்தவனாயும்,
வல் தாள் குருந்தம் தழைவாட ஒசித்து - வலிதான வேர்ப்பற்றை யுடைய குருந்தமரத்தை (அதன்) தழைகளெல்லாம் வாடியுலரும்படி முறித்தவனாயும்
தட தாமரை பொய்கை புக்கான் - பெரிய தாமரைக் தடாகத்திலிழிந்(து கோபிகளுடனே ஜலக்ரிடை செய்) தவனாபுமுள்ள பெருமானுடைய

விளக்க உரை

தடங்தாமரைப் பொய்கை புக்கான் ஸ்ரீ இதை இரண்டு வகையான நிர்வஹிப்பர்காளிய அன்றியே; ஆய்ச்சிகளோட ஜலக்ரிடை பண்ணுவதற்காகப் பொய்கையிலே புகுந்கபடியைச் சொல்லிற்றாகவுமாம். இப்படிப்பட்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான திருநாங்கூரில் மணி மாடக்கோயில் வணங்கென்மனனே!

English Translation

Then in the yore, the Lord drank the poison from the breast of the jeweled ogress, threw a devil-calf against a bedeviled wood-apple tree and destroyed both, toddled between two Marudu trees and broke them both, and entered the lotus pond. He resides in Nangur where the firm trees sway their branches, and creepers sway over them, the cuckoos sing. The peacocks dance, the clouds play drums and the pennons on mansion-tops flutter announcing their union. Offer worship in Manimadakkoyil, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்