விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடுமால் துணையா* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*
    காய் சின வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்* 
    மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தனியே - தாயினிடம் சொல்லாமல் தன் இஷ்டப்படியே
நெடு மால் துணை ஆ - ஸர்வேச்வரனைத் துணையாகக் கொண்டு
போயின - புறப்பட்டுப் போன
பூ கொடியாள் - அழகிய கொடிபோன்ற என் மகளும் (அவனும் ஆகிய இருவரும்)
புனல் ஆலி - நீர்வளம் மிக்க திருவாலியிலே

விளக்க உரை

“நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேற் பனிசோர, அல்லியுந்தாது முதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ, இல்லம் வெறியோடிற்றாலோ” (297) என்றாற் போலே தாய் வயிறெரிந்து சொல்லும்படியாக விட்டுப்பிரிந்து வயலாலி மணவாளன் பின்னே நடந்து சென்ற பரகால நாயகியைப்பற்றிக் கவலைப்பட்டுப்பேசின இத்திருமொழியை ஓதவல்லவர்கள் விண்ணுலகத்தே நித்யாநு பவம் பண்ணப் பெறுவர்களென்றவாறு. “நெடுமால் துணையா” என்னாநிற்க, “தனியே” என்றது - பிறந்தகத்து உறவுமுறையாருடனே புக்ககம் போகவேண்டியது ப்ராப்தகமாயிருக்க, அங்ஙனம் போகாமல் என்றபடி. புகுவரென்று=புகுவர்கொலோவென்று. ஈற்றடியில், “மேவிய நெஞ்சுடை யார்க்கு” என்றும் பாடமுண்டென்ப. “தஞ்சமாவது விண்ணுலகே” என்றவிடத்து வியாக்கியானம்- “தனிவழியே போனாளென்று தாயார்பயப்படப் போகவேண்டர் ஆதிவாஹிக கணத்தோடே தானே வழிகாட்டிக் கொடுபோம்.”

English Translation

This garland of sweet Tamil songs by angry-spear Kaliyan sing about a mother wailing that her daughter left the Lord Nedumal, that they would have entered the lake-filled Tiruvali. Those who master it will rule the sky-world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்