விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காவி அம் கண்ணி எண்ணில்*  கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்* 
  பாவியேன் பெற்றமையால்*  பணைத் தோளி பரக்கழிந்து*
  தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்*  நெடுமாலொடும் போய்* 
  வாவி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாவிசேர்அன்னம் அன்னத் நடையாள் - இறகையுடைய அன்னப்பேடையின் நடைபோன்ற நடையையுடையவளும்
ஈடு பணை தோளி - மூங்கில் போன்ற தோள்களையவளுமான  என் மகள்
பாவியேன் பெற்றமையால் - பாவியான என்னுடையவயிற்றிற் பிறந்த குற்றத்தினால்
பரக்கழிந்து - பெரும்பழிக்கு இலக்காகி
நெடுமாலொடும் போய் - ஸர்வேச்வரனோடு கூடச் சென்று

விளக்க உரை

என்மகளை என்மகளாக நினைத்திரேன்மின்; ஸாக்ஷாத் பெரிய பிராட்டியாரோடு ஒத்தவளாக நினைத்திருங்கள் என்கிறாள். முதலடியால். “பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்” (3280) என்பது நம்மாழ்வார்திருத்தாய் பாசுரம்; இத்திருத்தாய் “கடிமாமலர்ப் பாவை யொப்பாள்” என்கிறாள்; கந்தல் கழிந்தால் ஸர்வர்க்கும் நாரிணா முத்தமையுடைய அவஸ்தைவரக் கடவரக் கடவதாயிருக்கும்” என்பது ஸ்ரீவசநபூஷணம்: வந்தேறியான அஜ்ஞாநம் முதலிய தோஷங்கள் என்பது இதன் கருத்து. எம்பெருமானொருவனுக்கே உரிமைப்பட்டிருக்கை, அவனொருவனையே சரணமாகப் பற்றியிருக்கை, அவனொருவனை யே போக்யமாகக் கொண்டிருக்கை, அவனொருவனாலேயே தான் நிர்வஹிக்கத் தகுந்திருக்கை, ஸம்ச்லேஷத்தில் அறியிருக்கை, விச்லேஷத்தில் ஆறியிராமை என்னுமிவ்வாறு படிகளாலே அவித்யாதி தோஷங்கள் மிச்சமின்றிக் கழிந்து பரிசுத்தமாகப்பெற்ற ஆதமஸ்வரூபத்துக்கு இந்த ஆறுபடிகளாலும் நிறைந்துள்ள பிராட்டியோடு ஸாம்யம் இயற்கையாகவே உண்டாயிருக்குமன்றோ.

English Translation

Come to think, my lotus-eyed girl was verify the lotus-dame Lakshmi herself. Because of this sinful self, the Bamboo-slender-arms-one lost control of herself. Walking with the grace of the flighty swan, she left with her long-time lover. Would they have entered the cool lake-surrounded by fields of Tiruvali? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்