விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏது அவன் தொல் பிறப்பு?*  இளையவன் வளை ஊதி*
    மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்*  சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*
    மாதவன் தன் துணையா நடந்தாள்*  தடம் சூழ் புறவில்* 
    போது வண்டு ஆடு செம்மல்*  புனல் ஆலி புகுவர்கொலோ! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவன் - (என்மகளைக் கொண்டு போன) அவனுடைய
தொல் பிறப்பு - பழைய ஜன்மம்
ஏது - க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்?
அறியேன் - நானறிகின்றிலேன்;
இளையவன் - குமரனாயும்

விளக்க உரை

பரகால திருத்தாயார் இங்ஙனே தெருவிலே நின்று அலற்றுவதைக் கேட்டு ஓடிவந்தமாதர்களிற் சிலர்‘அம்மா! உன் மகளைக் கொண்டுபோனவன் என்ன ஜாதியிற் பிறந்தவன்? எவ்வூரிலிருந்து வந்தவன்? என்று கேட்க; நானொன்றுமறியேன்; “ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர” (498) என்கிறபடியே, யதுகுலத்திலே பிறந்து இடைக்குலத்திலே வளர்ந்தவனாமவன்; ஆகையால் அவனை நான் க்ஷத்ரியகுலத்தவனென்பேனோ, இடைக்குலத்தி னென்பேனோ? எனக்குச் சொல்லத்தெரியாது; நீங்களறிவீர்களாகில் சொல்லுங்கள். அவனுடைய ஊர் எதுவென்று கேட்கிறீர்கள்; அதுவும் எனக்குத்தெரியாது; “விண்ணபகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை-மண்ணகத்த, தென்குடந்தை தேனார்திருவரங்கம் தென்கோட்டி” (2343) என்றும் “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை” (2050) என்றும் சொல்லப்படுகிற ஊர்கள் ஒன்றா இரண்டா? பல்லாயிரமானால் எந்த வூரென்று நான் சொல்லுவேன்; உங்களால் நிஷ்கரிஷித்துச் சொல்லமுடியுமானல் சொல்லுங்கள். ஆனால் அவனைப் பார்க்கும்போது நான் தெரிந்து கொண்டவை சிலவுண்டு; பாண்டவர்கட்காகத் துரியோ தநாதியிடம் தூது போனவனும் பாரதப்போரில் தனது பாஞ்சஜன்யமென்னும் சங்கை வாயிலே வைத்து ஊதினவனும் இவன்றான் என்று தெரிந்துகொண்டேன். யெளவந புருஷனாயிருப்பதை நேரில் கண்டேன்.

English Translation

I don’t know his antecedents. The fellow used to blow conch and take messages for nobles. If you know where he lives, pray tell me. My daughter trusted God and went with him. Would they have entered the water-abounding Tiruvali where bees drink and dance in the lotus flowers of the lakes? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்