விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!*  அரக்கர் குலப் பாவை தன்னை* 
    வெம் சின மூக்கு அரிந்த*  விறலோன் திறம் கேட்கில் மெய்யே* 
    பஞ்சிய மெல் அடி*  எம் பணைத் தோளி பரக்கழிந்து* 
    வஞ்சி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெம் சொல் நங்காய் - விரும்பத்தக்க வாய் மொழியையுடைய (அயல் வீட்டுப்) பெண்ணே!
அரக்கர் குலம் பாவை தன்னை மூக்கு - ராக்ஷஸகுலத்துப் பதுமை போன்ற சூர்ப்பணகையினுடைய மூக்கை
வெம் சினம் - கடுங்கோபத்தாலே
அரிந்த - அறுத்தொழித்த
விறலோன் - மிடுக்கையுடையனான அந்த யௌவந  புருஷனுடைய

விளக்க உரை

வினவவந்த மற்றொரு தோழியை நோக்கிச் சொல்லுகிறார் தாய். “அரக்கர் குலப்பாவை தன்னை முக்கரிந்த விறலோன் திறங்கேட்கில் மெய்யே அஞ்சுவன்“ –தண்டகாரணியத்திலே இராமபிரான் வஸிக்கும் போது இராவணனது தங்கையான சூர்ப்பணகை அப்பெருமானைக்கண்டு காதல்கொண்டு தனது ராக்ஷஸூருபத்தை மறைத்து அழகிய பெண்ணின் வடிவுகொண்டுவந்து ‘என்னை அங்கீகரிக்கவேணும்‘ என்று ஸ்ரீராமனைப் பிரார்த்திக்க, அப்பிரான் ‘எனக்கு இதோ ஒரு ஸ்த்ரீ இருக்கிறாள், ஆதலால் அங்கே போ‘ என்று இளையபெருமாளைக் காட்ட, அவனும் ‘நான் ஸ்ரீராமனுக்கு அடிமை, என்னை மணந்துகொண்டால் நீயும் வேலைக்காரியாக வேண்டிவரும், ஆகையாலே அவர்பக்கலிலேயே போவாய்‘ என்ன, இப்படி இருவரும் தன்னை அவமதிக்கையாலே அச்சூர்ப்பணகை மிக்க சினங்கொண்டுபோக தனது உண்மையான வடிவுடனே வந்து ஸீதாபிராட்டியை எடுத்துக்கொண்டுபோக யத்நிக்க, அப்போது இராமபிரான் ஸ்த்ரீயென்று அவளை கொல்லாம் விட்டு இலக்குமணனைக்கொண்டு அவளது செவி மூக்கு முதலிய அங்கங்களையறுத்து மானபங்கஞ்செய்து போகவிட்டன்னென்பது வரலாறு. இதனை இவ்விடத்தில் (ப்ரகாலஜநநி) எடுத்துரைத்து, “இப்படிப்பட்ட தன்மையைக் கேட்க நான் அஞ்சுகின்றேன்“ என்று சொல்லியிருப்பதன் கருத்து யாது? அரக்கியில் மூக்கை யறுத்ததுபோலே என் மகளின் மூக்கையும் அறுத்துவிடுவனோவென்று அஞ்சுகின்றேனென்பதாகவன்றோ மேலெழ நோக்குமிடத்துக் கருத்துத் தோன்றாநின்றது.

English Translation

O Ladies! It is terrible. The Rakshasas clan’s precious dame lost her nose to the fury of the dark one. My body trembles in fear to hear about his might. My cotton-soft-feet-girl with Bamboo-like slender arms lost herself to him. Would they have entered the fertile Tiruvali surrounded by bowers with creepers and bamboo tickets? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்