விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இருட்டிற் பிறந்து போய்*  ஏழை வல் ஆயர்* 
  மருட்டைத் தவிர்ப்பித்து*  வன் கஞ்சன் மாளப்-
  புரட்டி*  அந்நாள் எங்கள்*  பூம்பட்டுக் கொண்ட* 
  அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
   அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இருட்டில் - இருள்நிறைந்த நிடுநசியில்;
பிறந்த - (மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி;
போய் - (அங்குநின்றும் அப்போதே ஆய்ப்பாடிக்குப்) போய்;
ஏழை - அவிவேகிகளான;
வல் - (தன்னைப் பற்றியிருக்கும்) மனவலிமையையுடைய;

விளக்க உரை

‘பிள்ளை பிறப்பது எப்போது!’ என்று உருவின கத்தி உருவியபடி கம்ஸன் நிற்கையாலே அவனுடைய கண்ணிற்படாதபடி யிருக்கவேணுமென்று நள்ளிருளிலே தேவகீ புத்ரனாய்த் தோன்றி அப்போதே ஸ்ரீவஸஜதேவரை எடுத்துப்போம்படி கட்டளையிட்டுத் தேவகி தன்னைப்பிரியும் பிரிவால் கதறத்தான் திருவாய்ப்பாடியிற் புகுந்து வளர்ந்தருளின வரலாறு அறிக. (ஆயர் மருட்டைத் தவிர்ப்பித்து) கம்ஸன் பூதநாதிகள் மூலமாகக் கண்ணனை நலிய நிலைத்திரா நன்றானென்றறிந்த இடையர்கள் தாங்களே கம்ஸனைக் கொல்வார் போலச் சில மருட்டு வார்த்தைகளைச் சொல்ல ‘நீங்களல்லாரும் வேணுமோ? நானே செய்வேன்’ என்று சொல்லித் தன் பேச்சாலே அவர்கள் அந்த மருட்டு வார்த்தைகளைச் சொல்லாதபடி தவிர்ப்பித்து என்பது பொருள். மருட்டு - மருளை யுடையது; அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; ‘இருள்’ ‘மருள்’ என்ற பெயர்ச்சொற்களின் மேல் டு என்ற விகுதி ஏறப் பெற்றது; “துறுடுக்குற்றியலுகரவீற்ற ஒன்றன் படர்க்கை டுக்குறிப்பினாகும்” என்பது - நின்னூல். பூ + பட்டு = பூம்பட்டு “பூப்பெயர் முன்னின மன்மையுந்தோன்றும்” என்ற சிறப்புவிதி அறிக.

English Translation

He was born in the darkness of a dungeon. He went to Mathura, dragged the evil Kamsa to death, and ended the misery of the good cowherd folk. The naughty fellow stole our silk vestments one day. He

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்