விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்வன்கொல் யான் அறியேன்*  கரியான் ஒரு காளை வந்து* 
    வள்ளி மருங்குல்*  என்தன் மடமானினைப் போத என்று*
    வெள்ளி வளைக் கைப் பற்ற*  பெற்ற தாயரை விட்டு அகன்று* 
    அள்ளல் அம் பூங் கழனி*  அணி ஆலி புகுவர்கொலோ! (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரியான் ஒரு காளை வந்து - கருநிறத்தவனான ஒரு யௌவன புருஷன் வந்து,
வள்ளி மருங்குல் - கொடி போல் நுட்பமான இடையை யுடையளாய்
என்தன் மடம் மானினை - இள மான் போன்றவளான எனது மகளை
போத என்று - வா வா என்றழைத்து,
வெள்ளி வளை கை பற்ற - வெள்ளை வளைகளணிந்துள்ள கையைப் பிடிக்க, (உடனே அவள்)

விளக்க உரை

திருத்தாயார் சொல்லத் தொடங்கும்போதே “கள்வன் கொல்” என்று எம்பெருமானைத் கள்ளனாகச் சங்கித்துச் சொல்கிறாள். சாஸ்த்ரங்களில் சேதநனைக் கள்வனாகச் சொல்லியிருக்கிறது; கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா” என்றது. எம்பெருமானுக்கே உரிமைப்பட்டதான ஆத்மாவை ஸ்வசேஷமாகவும் அந்ய சேஷமாகவுங் கருதுகின்ற சேதநன் ஆத்மாபஹாரக கள்ளனெனப்படுகிறான். தன் உடமையைத் தான் கைக்கொள்ளுகிற எம்பெருமானைக் கள்வனென்று சொல்லத்தகாது. ஆயினும், “ யானே என்றனதே” (2883) என்றிருக்கும் அஹங்கார மமகாரங்கள் நெடுநாளாக சேதநனிடத்து ஆழந்திக்கிடக்கும் வாஸநையி னுறைப்பினால் தன்னுடைய கள்ளத் தனத்தை எம்பெருமான்மீது ஏறிடலாகுமென்பது தோன்றக் கள்வன்கொல் என்கிறது. “செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்து ஆட்செய்மின், திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்” (3733) என்றதுங் காண்க.

English Translation

Was he a thief? I do not know. A dark bull-youth came to my slender-waisted fawn-eyed daughter saying, “Come!”, and held her bangled hand in his. Leaving me, her mother, she left. Would they have entered the beautiful Tiruvali surrounded by lotus-filled lakes and fields? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்