விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்டு அரவத் திரை உலவு*  குரை கடல்மேல் குலவரைபோல்* 
    பண்டு அரவின் அணைக் கிடந்து*  பார் அளந்த பண்பாளா!*
    வண்டு அமரும் வளர் பொழில் சூழ்*  வயல் ஆலி மைந்தா!* 
    என் கண் துயில் நீ கொண்டாய்க்கு*  என் கன வளையும் கடவேனோ!?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரவு இன் அணை - ஆதிசேஷனாகிற இனிய படுக்கையிலே
குலம் வரை போல் - சிறந்த மலைபோலே
கிடந்து - பள்ளிகொண்டவனாயும்
பார்அளந்த - (திரிவிக்கிரமனாய்) பூமியை அளந்தவனாயுமுள்ள
பண்பு ஆளா - தயாளுவானவனே!

விளக்க உரை

ஆர்த்தரான பக்தர்களுடைய கூக்குரல் கேட்பதற்குப் பாங்கானவிடமென்று திருப்பாற்கடலைத் திருவுள்ளம்பற்றி அங்கே பள்ளிகொண்டிருக்கும் பெருமானே! அங்ஙனம் அங்கே பள்ளி கொண்டிருக்கையில் ஒருகால் தேவேந்திரனுடைய கூக்குரல் கேட்டுப் பதறியெழுந்து மாவலிபக்கலிலே கணுருவாய் வந்து திரிவிக்கிரமனாகி உலகளந்த பெருமானே! இப்போதும் அன்பர்களேக் காப்பதற்கென்றே திருவாலியில் நித்யஸந்நிதி பண்ணியிருக்குமவனே! நீ இப்படிப்பட்ட குணசாலியாயிருந்து வைத்து என்னுடைய கண்ணுறக்கத்தையும் அபஹரித்துக் கைவளையையும் அபஹரித்தாயே! இது என்ன முறையை என்கிறாள். இப்பாட்டால், இரவும் பகலும் உன்னையே சிந்தித்துக்கொண்டு கண் உறங்கப் பெறாமல் மேனி மேலிந்து போனேன் என்றாராயிற்று.

English Translation

O Lord who came in the yore as the form reclining in sea on a snake! O Lord who measured the Good Earth in two tall strides and took it! Bumble-bees humming eternally, fresh bowers surround your temple. O Prince of Vayalali, you took my sleep, must you take my bracelet too?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்