விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாள் ஆய கண் பனிப்ப*  மென் முலைகள் பொன் அரும்ப* 
    நாள் நாளும்*  நின் நினைந்து நைவேற்கு*
    ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!*  வரை எடுத்த தோளாளா*
    என்தனக்கு ஓர்*  துணையாளன் ஆகாயே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாள் ஆய கண் பனிப்ப - வாள்போன்ற (எனது) கண்கள் நீரைப்பெருக்கவும்
மெல் முலைகள் பொன் அரும்ப - மெல்லிய முலைகளில் நிற வேறுபாடு தோன்றவும்
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு என்தனத்கு - நாள்தோறும் உன்னையே நினைத்துக்கொண்டு மனம் தளர்கின்ற எனக்கு
ஓர்துணையாளன் ஆகாய் - நீ சிறந்த துணைவனாக வேணும்

விளக்க உரை

கீழ் நான்கு பாசுரங்களும் தாது விடுவனவாய்ச் சென்றன. வயலாலி மணவாளனையே இடைவிடாது நெஞ்சில் பாவனை செய்துகொண்டிருந்ததனால், அவன் கண்முன்னே வந்து தோற்றுகிறனாகக்கொண்டு அவனோடு நேரே வார்த்தை சொல்லுவதாகச் சில பாசுரங்கள். பிராட்டி அசோகவனத்தில் திருவடியை நோக்கிப் பெருமாளுக்குத் தாதுமொழிகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது இடையிலே பெருமாளையே ஸம்போதநம் பண்ணி ‘நாதா! என் விஷயத்தில் சிறிது அபராதம் பண்ணின காகத்தின் விஷயத்தில் உன் பராக்கிரமத்தைப் பெரிதாகக் காட்டினாய்; அபராதம் அடியோடு பிரித்துக் கொணர்ந்து சிறைவைத்திருக்கின்ற மஹாபாபியான இராவணன்மேல் பொறுமை பாராட்டி நிற்கின்றாய்; இஃது என்ன? என்றிப்படிப்பட்ட சில வார்த்தைகளை முன்னிலேயாகவே சொன்னதுபோல இப்பரகால நாயகியும் வயலாலி மணவாளளே முன்னிலையாக்கிச் சில பாசுரங்கள் பேசுகிறாள்.

English Translation

O, The feet that measured the Earth, O, The ruler of Kudandai! O, The arms that held a mountain high, come and be my sweet companion. My spear-like-beauty-eyes rain with tears, my tender breasts have lost their colour. Everyday I think of you alone, O, When will you come to my arms!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்