விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தானாக நினையானேல்*  தன் நினைந்து நைவேற்கு*
    ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்*  வலி செய்ய மெலிவேனோ?*
    தேன் வாய வரி வண்டே!*  திருவாலி நகர் ஆளும்*   
    ஆன்ஆயற்கு என் உறு நோய்*  அறிய சென்று உரையாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேன் வாய வரி வண்டே - தேன்போல் இனிய வாய்ப் பேச்சையும் ரேகையையுமுடைய வண்டே!,
திரு ஆலி நகரி ஆளும் - திருவாலி நகரியை ஆட்சி புரிகின்ற
ஆன் ஆயற்கு சென்று - கோபாலகிருஷ்ணன் பக்கலிலே போய்
எனது உறு நோய் - எனது அதிகமான மனோவியாதியை
அறிய உரையாய் - தெளிவாகத் தெரிவிக்க வேணும்.

விளக்க உரை

உடையவன் உடைமையை விட்டுப்பிரிந்தால் ‘ஐயோ! உடைமையை இழந்தோமே!, மறுபடியும் அதனை நாம் பெறவேணுமே!, எப்படி பெறப்போகிறோம்’ என்று துணுக்குத் துணுக்கென்றிருந்து ஸொத்தின்மேலேயே கருக்தான்றியிருக்கவேண்ணடவது முறைமை; இந்த முறைமையை எம் பெருமாள் நோக்குகின்றிலன்; தன் சரக்காகிய என்னைப் பிரிந்து கவலையற்றிருக்கின்றானே; உடையவன் கவலையற்றிருந்தானாகிலும் உடைமை கவலை கொள்வது நியாயமன்று; அசேதநமாயிருந்துவிட்டால் கவலை கொள்ளாமலிருக்கலாம்; சைதந்ய முண்டாகையாலே கவலை கொள்ளாதிருக்கமுடியவில்லை; என்பது முதலடியின் கருத்து. “நாம் அவனைப்போலே யாகமாட்டோமே; நாமும் நினையாமைக்கு ஒரு நெஞ்சு படைக்கப்பெற்றிலோம்” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

English Translation

On his own he doesn’t pine for me, I alone do pine and despair. Is it right to make me thin through the pain of first-emblem Lord? He resides in Tiruvali, Cowherd-Lord and King of the realm. O Honey-tongue bumble bees, tell him of my woeful disease.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்