விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீர்வானம் மண் எரி கால் ஆய்*  நின்ற நெடுமால்* 
    தன்தார் ஆய நறுந் துளவம்*  பெறும் தகையேற்கு அருளானே*
    சீர்ஆரும் வளர்பொழில்சூழ்*  திருவாலி வயல்வாழும்* 
    கூர்வாய சிறுகுருகே!*  குறிப்புஅறிந்து கூறாயே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தன் தார்ஆய நறு துளவம் - தன்னுடைய மாலையாகிய மணம்மிக்க திருத்துழாயை
பெரும் தகையேற்கு அருளானே - மிகவும் தகுதியையுடையளான எனக்கு கொடுத்தருள்கின்றானில்லையே;
சீர்ஆரும் - சீர்மை பொருந்திய
வளர் பொழில் சூழ் - வளர்கின்ற சோலைகளாலே சூழப்பட்ட
திரு ஆலி - திருவாலிமாநகரில்

விளக்க உரை

சோலை வாய்ப்புப் பொருந்திய திருவாலியின் கழனிகளிலே மேய்ந்து வாழ்கின்ற சிறு குருகே, எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற்கிற ஸர்வேக்வரனான வயலாகி மணவாளன் தனது திருத்துழாய்மாலையை எனக்கு அருள் செய்கின்றிலன்; (அதாவது-மார்பிலிணிந்துள்ள மணமாலை என்கொங்கைத்தடத்தில் நெருக்குண்ணும்படி வந்து ஸம்ச்லேஷிக்கின்ளானில்லை.) அவனுடைய திருவுள்ளம் என்மேல் மாறிவிட்டதோ அறியேன்; நீ சென்று அவனது திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு வந்து எனக்குச் சொல்லவேணும்; நானொருத்தியிருக்கிறேனென்கிற நினைவோடேயிருந்து இவ்விடம் வருவதாக இருக்கிறானா? அல்லது, இத்தலையை மறந்தேயொழிந்தானா? அபிப்ராய மிருக்கும்படியை அறிந்து கொண்டுவந்து எனக்குச் சொல்லாய் என்கிறாள். குறிப்பறிந்து கூறாய்=அவனுடைய திருவுள்ளத்தை யறிந்து வந்து என்னிடம் சொல்லு என்ற பொருள்தவிர, மற்றொரு பொருளும் சொல்லலாம்; அதாவது-நான் உனக்குத் தாதுசொல்லும் வார்த்தையை அவனிடஞ்சென்று திடீரென்று சொல்லிவேண்டுமாதலால் அந்தக் குறிப்புத் தெரிந்துகொண்டு என் வார்த்தையை அவனிடம் சொல்லு என்பதாம்.

English Translation

Water, Sky, the Earth, Fire and Wind, -being all these, he is Lord above all. He denies his Tulasi wreath to my asking-weeping-self. He resides in Tiruvali amid fertile watered groves. O, Pecking-sharp beak-crane, learn what he intends for me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்