விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தூவிரிய மலர் உழக்கி*  துணையோடும் பிரியாதே* 
  பூவிரிய மது நுகரும்*  பொறி வரிய சிறு வண்டே!* 
  தீவிரிய மறை வளர்க்கும்*  புகழ் ஆளர் திருவாலி* 
  ஏவரி வெம் சிலையானுக்கு*  என் நிலைமை உரையாயே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொறி வாயி சிறுவண்டே - புள்ளிகளையும் ரேகைகளை யுமுடைய சிறிய வண்டே அக்நி காரியங்கங்கள் விஸ்தாரமாகப் பரவும்படி வைதிக மரியாதைகளே
வளர்க்கும் புகழ் ஆளர் திரு ஆவி - குறைவின்றி நடத்துகையால் வந்து கீர்த்தியையுடைய வைதிகரிகள் வாழ்கின்ற திருவாலியிலே நித்யவாஸம் பண்ணுகிற
ஏ வரிவெம் சிலேயானுக்கு - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆளவல்ல எம்பெருமானுக்கு
என் நிலைமை உரையாய் - என்னுடைய அவஸ்தையை சொல்லுவாயாக.
 

விளக்க உரை

வயலாலி மணவாளன் பக்கலிலே சென்று தமது நிலைமையைச் சொல்லுமாறு ஒரு வண்டை நோக்கிக் கூறுகிறார். அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தனையால், ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக் கிடக்கும்போது நீ இப்படி உன் காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ?’ என்னுங் கருத்து முன்னிரண்ட்டிகளில் வெளிவரும். வண்டுகள் சிறகுகளே விரித்துக்கொண்டு மலரை மிதித்தேறி மதுவைப் பருகுதல் இயல்பாதலால் “தாவிரியமலருழக்கி” எனப்பட்டது. ‘தா’ என்றும் ‘தாவி’ என்றும் சிறகுக்குப் பெயர். உழக்கல் மிதித்தல், சிதிலமாக்குதல். முதலடியில் “தாவிரியும் மலருழக்கி” என்ற பாடமுண்டென்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினால் தெரிகின்றது; தூய்தாக விரியும் மலரை=நன்றாக அலர்ந்த மலரை என்றபடி. பொறிவாயி = புள்ளிகளும் ரேகைகளும் வண்டுக்கு இயல்பு.

English Translation

Hovering on the lotus blooms, --never leaving your beloved spouse, Drinking from the nectar filled buds, O, My freckled bumble-bees! Go to my bow-wielding Lord, tell him of my condition. He resides in Tiruvali guarding the Vedic fire.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்