விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து*  உன் அடியேன் மனம் புகுந்த*
  அப்புலவ! புண்ணியனே!*  புகுந்தாயைப் போகலொட்டேன்*
  நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்*  தண் தாமரை மலரின்மிசை*
  மலி அலவன் கண்படுக்கும்*  அணி ஆலி அம்மானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தண்தாமரை மலரின் மிசை - குளிர்ந்த தாமரைப் பூவின் மேலே
மலி அலவன்கண் படுக்கும் - பெரிய ஆண் நண்டுகள் பள்ளி கொண்டிருக்கப் பெற்ற
திரை உலவு கடல் - திரைக் கிளப்பத்தையுடைய திருப்பாற்கடலில்
பள்ளிகொண்டு - சயனித்திருந்து
 

விளக்க உரை

எம்பெருமான் திருப்பாற்கடல் முதலியவிடங்களில் வாழ்வதானது அவ்விடமே உத்தேச்யமென்கிற எண்ணத்தினாலன்று; எந்த ஸமயத்திலே எந்த அன்பருடைய உள்ளத்திலே புகுந்து கொள்ளலாமென்று பார்த்துக்கொண்டு உபாயாநுஷ்டாநம் பண்ணுமவன்போல அங்கே கிடக்கிறானென்பர்; இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷணத்தில்-“ ‘திருமாலிருஞ் சோலைமலையே’ என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏகதேசத்திலே பண்ணும்; அங்குத் தைவாஸம் ஸதாநம், இங்குத்தைவாஸம் ஸாத்யம். ‘கல்லுங்தனை கடலும்’ என்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். ‘இளங்கோயில் கைவிடேல்’ என்று இவன் ப்ரார்த்திக்க வேண்டும்படி யாயிருக்கும்.” 170-3 என்ற ஸ்ரீஸூக்திகளால் நன்கு விசதமாகும். இதுவே இப்பாட்டின் முதலடியிலுறையும் பொருளாம். உலவு திரைக்கடலில் பள்ளிகொண்டிருந்தது அடியேன் மனத்தில் புகுருகைக்காக வென்கிறார். இப்படி நெடுநாள் பாரித்து ஸமயம் பார்த்து என் மனத்திலே புகுந்து உன்னை இனி நான் போகவொட்டேனென்கிறார். “(அப்புலவர் ;) விசேஷஜ்ஞனல்லையோ? அவஸரமறியாயோ புகுருகைக்காக” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க. ‘புண்ணியனே!’ என்றது-உன்னைப் பெறுவதற்கு உறுப்பாக என்பக்கலிலே யாதொரு ஸூக்ருகமுங் கண்டத்திலே; நீயே யன்றோ மூலஸூக்ருதம் என்றபடி.

English Translation

O, Lord of beautiful Tiruvali, amid lakes where male crabs rest on lotuses under the shade of ever-blossoming Punnai and Nalai trees! You left your serpent bed in the ocean to come and reside in this lowly heart. O, My sacred poet, I shall never let you go.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்