விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கந்த மாமலர் எட்டும்இட்டு*  நின்காமர் சேவடி கைதொழுது எழும்* 
  புந்தியேன் மனத்தே*  புகுந்தாயைப் போகலொட்டேன்*
  சந்தி வேள்வி சடங்கு நான்மறை*  ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்* 
  அந்தணாளர் அறா*  அணி ஆலி அம்மானே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆதியாய் ஓதிஓது வித்து வரும் அந்தணாளர் அறா - அநாதிகாலமாகம தாங்கள் ஓதியும் பிறர்க்கு ஓதுவித்தும் வருக்கின்றன பிராம்மணர்கள் விட்டுநீங்காத (நித்யவாஸம் பண்ணுமிடமான)
நின்காமருசே அடி - உனது அழகிய திருவடிகளிலே
கந்தம் மா மலர்எட்டும் - மணம் மிக்க சிறந்த எட்டு வகைப் பூக்களையும் ஸமர்ப்பித்து
கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே - வணங்கி உஜ்ஜீவிக்கவேணு மென்கிற அத்யவஸாய முடையேனான்  என்னுடைய நெஞ்சிலே

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “என் மனம் வாட நீ நினையேல்” என்று மறைபொருளாகச் சொன்னதின் கருத்து வெளிப்படுமாறு இப்பாசுர மருளிச்செய்கிறார். என்ற வடசொல் ‘கந்தம்’ என்று கிடக்கிறது; மணம் மிக்க மாமலரெட்டும் எவையென்னில்; கருமுகை, கற்பகம், நாழல், மந்தாரம், ஸௌகந்தி, செங்கழுநீர், தாமரை, தாழை என்பனவாம். இவற்றைச் சொன்னது மற்றும் தேவார்ஹமாயுள்ள புன்னை முதலிய புஷ்பங்களுக்கும் உபலக்ஷணமாம். “மாமல ரெட்டு மிட்டு” என்றவிதற்கு-ஒவ்வொரு அக்ஷரமும் நறுமலர்பேர்போலே அவனுக்கு போக்யமாம்படியிருக்கைவாலே எட்டு மலர்கள் போன்ற எட்டெழுத்தோடுங்கூடின திருமந்திரத்தை அநுஸந்தித்து என்பதாகவும் பொருள் கூறலாம். அன்றியே; “அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ: 1. ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத:. ஜ்ஞாநம் புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச-ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரிதிகரம்பவேத்.” என்கிறபடியே அஹிம்ஸை, இந்திரிய நிக்ரஹம், ஸர்வ பிராணிகளிடத்திலும் இரக்கம், பொறுமை, ஞானம், தவம், தியானம், ஸத்யம் என்று எட்டு வகையான புஷ்பங்களாகச் சொல்லப்பட்டவற்றை ஸமர்ப்பித்து என்றுமாம். (இப்பொருள்கள் ஆசார்யஹ்ருதய (99 ஸூ) வியாக்கியானத்திலுள்ளவை.)

English Translation

O, Lord of beautiful Tiruvali, where generations of Vedic seers live, learning and teaching the chants, the sacrifices, and the ritual practices from beginning less yore! My heart worships your adorable lotus feet with fragrant flowers culled from the eight Quarters, you have entered into my lowly heart. Now I shall never let you go.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்