விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீடு பல்மலர் மாலைஇட்டு*  நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
    என் மனம் வாட நீ நினையேல்*  மரம் எய்த மா முனிவா!*
    பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து*  பல் பணையால் மலிந்து*
    எங்கும் ஆடல் ஓசை அறா*  அணி ஆலி அம்மானே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பல் பணையால் மலி;ந்து - பலவகைப்பட்ட வாத்ய கோஷங்களாலும் நிறைந்திருக்கப் பெற்றதும்
எங்கும் ஆடல் அம்மானே - அழகிய திருவாலிநகரிக்கு ஸ்வாமியே!,
மரம் எய்த மா முனிவா - (ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) மராமரங்களேழின் மேலும் அம்புவிட்டுத் துளைத்த ஸத்யஸங்கல்பனே!,
நின் இணை அடி - உன் இணைத்திருவடிகளில்
பல் மலர்மாலை நீடு இட்டு - பல வகைப்பட்ட புஷ்பமாலேகளை நெடுங்கலாம் ஸமர்ப்பித்து

விளக்க உரை

எப்போதும் உன்னுடைய திருவடிகளிலேயே அந்தரங்கப் பணிவிடைகள் செய்து கொண்டு போதுபோக்காநின்ற என்னுடைய மனத்தை நீ ஒருபோதும் வாடச்செய்ய நெஞ்சால் நினைக்கவுங்கூடாது; (இந்த நித்ய ஸம்ச்லேஷத்துக்கு ஒரு குறை நேர்த்தால் இவருடைய மனம் வாடிப்போகுமாதால் ஒரு நாளும் பிரியாதிருக்கவேணு மென்றாவாறு.) ***- பிரானே! ஸூக்ரிவனுக்கு நம்பிக்கையுண்டாக்குவதற்காக அருந்தொழில் செய்தாய்; எனக்காக அப்படிப்பட்ட செயலொன்றும் நீ செய்யவேண்டர் என்னைவிட்டுப் பிரியாதிருத்தால் போதுமானது என்ற கருத்துத் தொனிக்கும் மரமெய்த மாமுனிவா! என்ற விளியினால்.

English Translation

O, Lord of beautiful Tiruvali, where sounds of conches, chants, ensembles and dances, never cease! O Hermit who shot through seven trees! My heart worships you feet with many flowers and garlands forever. Pray never think of letting my wither!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்