விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை*  என் மனத்தே புகுந்தது* 
  இம்மைக்கு என்று இருந்தேன்*  எறி நீர் வளஞ் செறுவில்*
  செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ*  அரிவார் முகத்து எழு வாளை போய்*
  கரும்பு அந் நல் நாடு அணையும்*  அணி ஆலி அம்மானே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எறி நீர்வளம் செறுவில் - அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களிலே
செந்நெல் கூழை - செந்நெற்பயிர்கள்
வரம்பு ஒரி இ - வரப்புகளின்மேலே சாயவிட்டு
அரிவார்முகத்து - அறுக்கிறவர்களுடைய முகத்திலே
எழு வாளை - (அக்கதிர்களில் நின்றும்) குதித்துப்பாய்ந்த மீன்களானவை (அபாயமுள்ள இவ்விடம் இனி நமக்குத் தகாதென்று அவ்விடம் விட்டுப்) புறப்பட்டுப் போய்

விளக்க உரை

இனி போக்குவரத்து இல்லாமே ஸ்திரப்ரதிஷ்டைம்படி என் மனத்திலே புகுந்தாயென்கறது முதலடி. நென்னல் போய் வருமென்றென்றெண்ணி யிராமை = உலகத்திலே ஒருவர் விட்டுப்பிரிய நேர்வதுண்டே; காதலியை காதலன் விட்டுப்பிரிந்து தேசாந்தரஞ் சென்றால் விரஹவ்யஸநத்தை ஒருவாறு ஆற்றிக்கொள்வதற்காக ‘நேற்றுப் போனார், இன்று வந்திடுவர்’ என்று சொல்லிக் கொண்டே காதலி காலங்கழிப்பது வழக்கம்; அப்படிச்சொல்லிக்கொண்டு ஏங்கிக்கிடக்க வேண்டாதபடி வயலாலிமணவாளன் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை ஒரு நொடிப்பொழுதும் ட்டுபிரியாகிருக்கின்றமையைச் சொன்னபடி. “ நென்னல் போய் வரும்” என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் சொல்லலாம்; நேற்று ஒரு நாள் கழிந்தது, இவற்றை நாள் வந்தது; இதுவுங்கழிந்து நாளை நாள் வரக்கடவது, அதுவும் கழிந்து அடுத்த நாள் வரக்கடவது என்றிப்படியே (பரதாழ்வான் போலே) பல்லைக்கடித்துக் கொண்டு பிரிவு நாள்களே எண்ணியிருக்க வேண்டாதபடி-என்றுமாம்.

English Translation

O, Lord of beautiful Tiruvali! The Valai fish in paddy fields caught in the compass of the sickle leap out from the waters over the harvesters’ faces and move into the dense sugarcane thickets. Without deceiving me with “Going yesterday and coming tomorrow”, you have come to live forever in my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்