விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன்பின் வணங்கும் என்* 
  சிந்தனைக்கு இனியாய்!*  திருவே என் ஆர் உயிரே* 
  அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*
  அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எங்கும் - எல்லாவிடங்களிலும் பாளியிருப்பதனாலே
செம் தழல் புரையும் - சிவந்த அக்கி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற
திரு ஆலி அம்மானே - திருவாலியில் எழுந்தருளியிருக்கும் பெருனானே!, எனக்குச் செல்ல மானவனே!
என் ஆர்உயிரே - எனது அருமையான உயிர்போன்றவனே!,
வந்து - நீயாகவே நிர்ஹேதுக் விஷயீகாரம்பண்ணி

விளக்க உரை

எம்பெருனானுக்கு பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமாகையாலே. இப்போது அப்பெருமான் இவ்வாழ்வாரது திருவுள்ளத்திலே வந்து குடிகொண்டான். தம்முடைய பிரார்த்தனே யின்றியே அவன் தானாகிவே விரும்பி வந்து புகுந்து மகிழ்ச்சி உள்ளடங்காமல். “வந்துனதடியேன் மனம் புகுந்தாய்” என்று வாய்விட்டுப் பேசுகின்றார். (புகுந்ததற்பின் வணங்குமென் சிந்தனைக் கினியாய்!) அவன்றானாகவே வந்து புகுந்தாலும் ‘உன்னை இங்கிருக்க வொட்டேன்’ என்று அடித்துத் துரத்தும் பாவிகளுமுண்டே ஸம்ஸாரத்தில்; அப்படியல்லாமல்” இசைவித்தென்னையுன் தாளிணைக் கீழிருத்துமம்மானே 3202” என்னுமாபோலே பெரு நன்றி பாராட்டின தமக்குத் தித்தித்திருந்தமை சொன்னபடி. ஆழ்வாருடைய திருவாராதனத் திருமூர்த்திக்குச் சிந்தனைக்கினியானென்று திருநாமம் ப்ரஸித்தம். இத்திருநானங் கொண்ட திவ்யமங்கள விக்ரஹம் இன்றைக்கும் கலியன் ஸந்நிதியில் ஸேவை ஸாதிப்பர்.

English Translation

O, Lord of Tiruvali, my wealth! Freshly sprouted red leaves on beautiful Asoka trees everywhere paint the landscape with fire. You are my life breath, you have entered the heart of this lowly self. My heart worships you, you are indeed sweet to my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்