விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து* 
    கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*
    கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி* 
    சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கழுநீர்கூடி - செங்கழுநீர்ப்பூக்களில் (பேடையோடு) சேர்ந்திருந்து
துறை தங்கு கமலத்து துயின்று - நீர்நிலங்களிலுள்ள தாமரைப் பூவிலே (புகுந்து தேனைப் பருகி அங்கே) உறங்கி (அதன் பிறகு)
கைதை தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி - தாழைமடல்களில் பொருந்தியுள்ள பூந்தாதுத் துகள்களிலே புரண்டு
களி பாடும் வயல் சூழ் - களித்து இசைபாடப் பெற்ற கழனிகளால் சூழப்பட்ட

விளக்க உரை

- (கழுநீர்கூடி இத்யாதி.) - வண்டுகளானவை செங்கழுநீர் மலர்களிலே பேடைகளுடன் கூடிரமித்து அதனுலுண்டான துவட்சிக்குப் பரிஹாரமாகத் தாமரைப் பூக்களிலே வந்து துயில் கொண்டிருந்து (தேனைப் பருகிக் களை தீர்ந்து) பின்பு தாழைமடற் சுண்ணங்களிலே போய்ப்புரண்டு களிப்பின் மிகுதியாலே இசை பாடுகின்றனவாம். “கேதகி” என்னும் வடசொல் ‘கைதை’ எனவும் ‘சூர்ணம்’ என்னும் வடசொல் சுண்ணம் எனவும் திரிந்தன.

English Translation

Keeping mat-hair Siva on the right of his side, Brahma too on the full blossomed lotus, Sharp as-spear-eyes lady-lotus on chest: devotees, come if you wish to see the Lord thus. Bumble bees in lotus buds drink the nectar, then go to sleep wearing screw pine pollen, Sing and dance in wed fields-surrounded Kali- Seerama Vinnagar, O People, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்