விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்* 
  நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*
  நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்* 
  செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாலை தஞ்சு உடைய இருள் தழைப்ப - அந்திப் பொழுதை ஆதாரமாகவுடைய இருட்டை அதிகப்படுத்தவும்
ஆங்கே தரளம் தண் மதியின் நிலா காட்ட - அவற்றின் நடுவே யழுத்தின முத்துக்கள் குளிர்ந்த சந்திரனது நிலாவைக் காட்டவும்
பவளம் தன்னால் - (இடையிடையே அழுத்தப்பட்ட) பவழங்களாலே
சுடர் செம் வெயில் விரிக்கும் - (உதயகாலத்து) ஸூர்யனுடைய சிவந்த காந்தியைப் பரப்பவும் பெற்று
அழகு  ஆர் - அழகு பொருந்தியுள்ள

விளக்க உரை

[நீலமாவல யித்யாதி.] - இத்தலத்தில் திருமாளிகை களெல்லாம் நவமணிகளிழைக்கப் பெற்றுள்ளவை யென்பதை ஒரு வர்ணனையாக வெளிப்படத்துகிறார்சேராச் சேர்த்தி யாயிருக்கிறதென்கிறார். இருள், சந்திரன், ஸூர்யன் என்னும் இம்மூன்றும் கூழ வாழ்கின்றனவென்று சமத்காரமாக வருணிக்கிறார். அதாவது - நீலமணிகள் முத்துக்கள் பவழங்கள் இவை அங்குள்ள திருமாளிகைகளில் (அல்லது திருக்கோயிலில்) மாறி மாறிப் பதித்துளளதனால், நீலமணிகள் அழுத்தப் பெற்றுள்ள விடங்களில் நீலச்சுடர் மலிந்திருப்பது இருள் மூழக் கிடப்பது போன்றுளது முத்துக்கள் பதிக்கப் பெற்றுள்ள விடங்களில் அவற்றின் வெள்ளொளி நிலவு போன்றுளது; பவழங்கள் பதிக்கப் பெற்றுள்ள விடங்களில் அவற்றின் செஞ்சுடரானது உதய காலத்து ஸூர்யனுடைய சிவந்த வெயில் போன்றுள்ளது. ஆகவே வ்யதி கரணங்களாயிருக்கக்கூடிய பொருள்களும் ஸமாநாதிகரணங்களாயிருக்கப் பெற்ற அழகு வாய்ந்தது இத்தலம் என்றதாயிற்று. தஞ்சு - தஞ்சம், இருளானது மாலைப் பொழுதைப் பற்றுக் கோடாக வுடையதாதலால் “ மாவலதஞ்சுடைய விருள் “ எனப்பட்டது.

English Translation

For the sake of Nappinnai He fought seven bulls. For the love of Prahlada he took a lion-form And tore the strong chest of Hiranya with claws. Devotees, who wish to see the pure Lord, hear me. Mansions with blue gems that steal the darkness, set with pearls shining like moon in the dusk and Corals that light up like the red Sun rise in Seerama Vinnagar, O People, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்