விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து* 
    நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*
    நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்* 
    செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செய் அணைந்து - களை பறிப்பதாகக்  கழினியிலே இழிந்து,
நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் - நெய்தல் மலரையும் கருமை நிறம் மிக்க குவளை மலரையும் தங்களுடைய கண்களாகவும்
குமுதம் மலர்தம் வாய் என்றும் - சிவந்த ஆம்பல் மலரை தங்களுடைய வாயாகவும் ப்ரமித்து
களை களையாது ஏறும் - களை பறியாமலே வெறுமனே கரையேறுமிடமான
காழி - சேர்மின்

விளக்க உரை

நெய்தலோடு இத்யாதி - இத்தலத்தில் வாழ்கின்ற கடைச்சாதிப் பெண்களும் அழகிற் சிறந்துள்ளாரென்பதை ஒரு சமத்காரம் பொலியப் பேசுகின்றனர். கடைசிமார்கள் - உழவுத் தொழில் செய்யும் ஈனசாதி மாதர். கழனிகளில் பயிர்களினிடையே நெய்தல். குவளை, குமுதம் முதலியன உண்டாவது வழக்கம். அவற்றால் பயிரின் வளர்ச்சி குறைபடுமாதலால் அவற்றைக் களை பறிப்பதும் வழக்கம். அங்ஙனமே களை பறிப்பதாகக் கழனிகளில் இழிந்த இழிகுல மக்கள் அந்த நெய்தல் மலர்களையும் குவளை மலர்களையும் தங்களுடைய கண்களாகவே பாவித்தும், குமுத மலர்களைத் தங்கள் வாயாகவே பாவித்தும் நம்முடைய அவயவங்களையேயோ நாம் பறித்தெறிவது ! இஃது என்ன காரியம்! என்று கையொழிந்து களை பறியாமலே வெளியெறுகின்றனராம். மாயக் கவணி, பெரியாழ்வார்திருமொழியில் (3-5-3) “ தம்மைச் சரணென்ற தம்பாவையரைப் புனம் மேய்கின்ற மானினம் காண்மினென்று, கொம்மைப் புயக்குன்றா; சிலை குனிக்குங் கோவர்த்தனம் என்ற பாசுரத்தின் தாற்பாயிசைலியும் இங்கு ஸ்மரிக்கத் தக்கது. கோவர்த்தனகிரியில் வாழும் குறத்திகள் மானேய்மடநோக்கிககள் என்பதைப் பெறுவிக்க நினைத்த பெரியாழ்வார் ஒரு வர்ணனை பண்ணினது போல இவ்வாழ்வாரும் இப்பாட்ழல் இந்த வர்ணனை வைத்தாரென்க. கடைசிமார்களின் அழகே இப்பழ யிருக்குமாயின், குல மாதர்களின் அழகு சொல்ல வேணுமோ என்று கைமுதிகந்யாயந்தோற்றக் கடைசிமார்களைக் கூறியவாறு, ஆடவர்களின் ஜ்ஞாநாநுஷ்டாகங்களை வருணித்தல் போல, மடவார்களின் அவயவ ஸளந்தரியத்தை வருணித்தலும் நகரிக்குச் சிறப்புக் வுறுதலிற் சேர்ந்தாமென்பது உணரத்தக்கது, “ ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி என்றாரிறே கீழும். வை - கூர்மை “ மதங்கள் செய்து “ என்றவிடத்து “ வானத்தெழுந்த மழைமுகில் போல் எங்குங், கானத்து மேய்ந்து களித்து விளையாடி, ஏனத்துருவாய் “ என்று பெரியாழ்வார்பாசுரம் அனுஸந்திக்க.

English Translation

On his tusk he bore Dame Earth coming as a big boar. Lifted her in the sky whispering the Vedas. With a sharp-edge discus He cut the thousand mighty arms of Asura king Bana in the yore. Transplanting farming-maids see their faces, eyes and lips reflected in the water lilies, -- then cease to work in the fields of the kali-Seerama Vinnagar, O people, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்