விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மெச்சு ஊது சங்கம் இடத்தான்*  நல் வேய் ஊதி* 
  பொய்ச் சூதிற் தோற்ற*  பொறை உடை மன்னர்க்காய்*
  பத்து ஊர் பெறாது அன்று*  பாரதம் கைசெய்த* 
  அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
        அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மெச்ச- (அனைவரும்) கொண்டாடும்பட;
ஊது - ஊதுகின்ற;
சங்கம் - பாஞ்சஜந்யத்தை;
மிடத்தான் - இடக்கையில் ஏந்தியுள்ளவனும்;
நல்வேய் - நல்ல வேய்ங்குழலை;

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவர் துர்யோதநாதிகள் என்ற இருவரையும் ஸந்திசெய்விக்கைக்காகத் துர்யோதநாதியரிடந் தூதராகச் சென்று ‘பாண்டவர்களும் நீங்களும் பகைமை கொள்ள வேண்டாம்; ராஜ்யத்தில் இருவருக்கும் பாகமுண்டு; ஆதலால் ஸமபாகமாகப் பிரித்துக்கொண்டு ஸமாதாநமாக அரசாட்சி செய்து வாழுங்கள்; அதற்கு ஸம்மதியில்லாவிடில் தலைக்கு இரண்டிரண்டு ஊராகப் பாண்டவர் ஐவர்க்கும் பத்து ஊரைக்கொடுங்கள்; அதுவும் அநஷ்டமாகில் பாண்டவர்கள் குடியிருக்கும்படி ஓரூரையாவது கொடுங்கள்’ என்று பலபடி அருளிச்செய்ய அந்தச் சொல்லுக்குச் சிறிதும் ஸம்மதியாமல் ‘பராகமமிருந்தாலர் போர்செய்து ஜயித்துக் கொள்ளட்டும்; இந்தப் பூமி வீரர்க்கே உரியது’ என்றிப்படி திக்காரமாக மறுத்துச்சொல்லவே தான் பாண்டவ பக்ஷபாதியாயிருந்து எதிரிகளைத் தோற்பித்தனனென்க. மெச்ச - ஊது = மெச்சூது; தொகுத்தல் விகாரம். கண்ணன் பசுநிரை மேய்க்கும்போது திருச்சங்கையும் வேய்ங்குழலையும் கொண்டிருப்பனாதலால் அவனை ‘மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி’ என்றார்: “ஆநிரையினம் மீளக்குறித்த சங்கம்” “கேயத்தீங்குழலூதிற்றும் நிரைமேய்த்ததும்” என்பனகாண்க.

English Translation

The Lord with the conch on his left, the good flute player, went as a messenger and forged the great Bharata war for the sake of the patient kings who lost in games of loaded dice and could not secure

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்