விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
    நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*
    உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
    எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூழ்ந்து இயங்க - (அந்த முத்துக்களைச்) சுற்றி ஸஞ்சாரியா நிற்கப் பெற்றதும்
எங்கும் - எல்லாவிடங்களிலும்
தேன்முகம் ஆர்கமலம் - தேனெழுகுகின்ற முகம் பொருந்திய தாமரைகளையுடையதும்
சேல் பாய் - மீன்கள் துள்ளிக் குதிக்கப் பெற்றதுமான
வயல் - கழனியையுடைய

விளக்க உரை

மற்றெல்லாருடைய ஆயுளைக் காட்டிலும் நான்முகக் கடவுளின் ஆயுள் நீண்டதென்பது ப்ரஸித்தம். இதனால் அவன் மிக்க அஹங்காரங் கொண்டிருந்தான் சிரஞ்சீவிகளில் நமக்கு மேற்பட்டாரில்லை என்று செருக்குக் கொண்டிருந்த அந்த நான்முகனுடைய கருவத்தை எம்பெருமான் ரோமசரென்னும் ஒரு மஹர்ஷியினால் தொலைத்திட்டன னென்கிறது முதலடியில், ரோமசரென்பவர் சரீரமுழுவதும் அடர்ந்த மயிர்களையுடைய ஒரு மாமுனிவர். இவர் நீண்டகாலம் வாழ்ந்திருந்து எம்பெருமானைச் சிந்தனை செய்யவேணுமென்று குதூஹலமுடையவாய், தீர்க்காயுஸ் பெறுவதற்காக ஒரு புண்ய நதிக் கரையிலிருந்து தவஞ்செய்து கொண்டிருக்கையில் அளவு கடந்த ஆனந்தங்கொண்ட ஸ்ரீமந்நாராயணன், இவர் முன்னே வந்து ஸேவை தந்தருளி, உம்முடைய விருப்பத்தைக் கூசாதே வேண்டிக் கொள்ளும் என்று சோதிவாய் திறந்தருளிச் செய்ய, மாமுனிவரும் இவ்வுடம்போடே உன்னை வெகுகாலம் வழிபட வேணுமென்று பேராசை கொண்டிருக்கிறேன் நான் அனேகமாயிரம் ப்ரஹ்ம்மாக்களுடைய ஆயுளை என்னொருவனுக்குக் கல்பித்தருளினால் மஹாப்ரஸாதமாகும் என்று கை கூப்பி விண்ணப்புஞ்செய்ய எம்பெருமான் அப்படியே திருவுள்ளமுவந்து “ மாமுனிவரே! ப்ரஹ்மாவினுடைய ஆயுளின் அவதி உமக்குத் தெரிந்ததே ஒரு ப்ரஹ்மா காலஞ்சென்றால் உம்முடைய உடம்பினின்றும் ஒரு ரோமம் இற்று விழக்கடவது இப்படி ஒவ்வொரு ப்ரஹ்மாவின் முடிவிலும் ஒவ்வொரு மயிராக இற்று வந்து இனி உம்முடைய உடம்பில் ஒரு ரோமம் இல்லை என்று சொல்லத்தக்க நிலைமை நெருமளவும் நீர்ஜுவித்திருக்கக் கடவீர்! என்று வரம் தந்தருளி மறைந்திட்டனன் - என்பதாக இக்கதையின் விவரணம் கேட்டிருக்கை. இதிஹாஸ புராணங்களிலிருந்து இதற்கு ஆகரம் கண்டு கொள்க. பல கோழ நூறாயிரம் ப்ரஹ்மாக்களின் ஆயுளை ரோமச மஹர்ஷிக்கு வரங் கொடுத்த பெருமானென்று முதலடியாற் சொல்லிற்றாயிற்று.

English Translation

Proud over his life span Brahma forgot chanting and lost one head by the curse of Romasa Siva took the skull as a begging bowl, O! Our Lord did fill it with blood and free him. He resides in fertile fields ploughed by big bulls, where conches grow pearls and egrets hatch them. Lotus blooms spilling nectar thrill the fish in Seerama Vinnagar, O people, go to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்