விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த* 
    வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்* 
    ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்* 
    தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மருவார்ஊன் அமர்வேல் - எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான
கலிகன்றி - திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த)
ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும் - அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
கற்று வல்லார்மேல் - ஓதித் தேறினவர்களிடத்தில்
தீவினை சாரா - பாவங்கள் கிட்டமாட்டா

விளக்க உரை

English Translation

The Lord comes surrounded by be humming flower-bowers in Tillai Tiruchitrakudam. Kalikanri the king of the Mangai tract, who wields the sharp enemy-piercing spear, has sung this garland of Tamil songs in his praise. Those who master it will never acquire evil karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்