விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து* 
    அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து* 
    உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று* 
    தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முத்து உடை மாகடல் ஒத்து - முத்துக்களையுடைய பெரிய கடல் போன்றவனாயும்
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து - அருவிகளின் கூட்டங்களால் விளங்குகின்ற ஆயிரம் பொன் மலைகள்   போன்றவனாயும்,
உருவம் கருகுழல் ஆய்ச்சி திறந்து - அழகிய கருத்த கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
மால் விடை இனம் செற்று - பெரிய ரிஷபங்களின் திரளைத் தொலைத்தவனாயும்
தெருவில் திளைத்து வருவான் - திருவாய்ப்பாடியின் வீதியிலே கூத்தாடிக்கொண்டு வருமவன்

விளக்க உரை

திருவாய்ப்பாடித் திருவீதியிலே கண்ணபிரான் எழுந்தருளும் போது பார்த்தால், ” கார்காலத்துக் காளமேகந்தான் இங்ஙனே வடிவெடுத்து நடந்து செல்லுகின்றதோ! என்று சிலர்க்கு உத்ப்ரேக்ஷிக்கலாம்படியிருக்கும், முத்துவடங்கள் முதலிய ஆபரணங்களை அணிந்து கொண்டு செல்வதைப் பார்த்தால் முத்துக்கள் மலிந்த கருங்கடல் தான் இங்ஙனே வடிவெடுத்து நடந்து செல்லுகின்றதோ! என்றும், அருவிகள் விளங்குகின்ற பொன்மலைகள் பல கூடி இங்ஙனே உருவெடுத்து நடந்து செல்லுகின்றனவோ! என்றும் சிலர்க்கு உத்ப்ரேக்ஷிக்கலாம்படியிருக்கும். ஆகவிப்படி உத்ப்ரேக்ஷிக்கத்தக்க வடிவழகு வாய்ந்து, நப்பின்னைப்பிராட்டியைத் திருமணம் புணர்வதற்குக் கொண்ட கோலத்துடனே வீதியார வரும் போது யாதொரு அழகு விளங்கிற்றே. அவ்வழகைப் பின்புள்ளாரும் ஸேவித்து மகிழும்படி ஸேவைஸாதிக்குமிடம் திருச்சித்ரகூடம் என்றாராயிற்று. பருவக்கருமுகில் - பருவமாவது காலம் அதாவது இங்கு மாரிகாலம். இரண்டாமடியில் பொன் மலையைச் சொன்னதால் ஆபரணச் சேர்த்தி விவக்ஷிதமென்க. ” பலபலவேயாபரணம் ” 2834, என்பவாதலால் ” ஆயிரம் பொன்மலை யொத்து ” என்றார்.

English Translation

The cowherd-dame Nappinnai with her dark tresses looked like the rainladen cloud, the pearl-laden sea, the stream-laden mountain range. Our Lord subdued seven mighty bulls to win her. He comes playing in the streets, he resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்