விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்* 
    மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*
    வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்* 
    தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் பாடி - “வண்டுகள் மதுவுண்கிற தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு நாதன்” என்றும் சொல்லிப் பாடிக்கொண்டு
தே(ன்) மலர்தாவ - செவ்விகுன்றாத புஷ்பங்களைப் பணிமாற
வருவான் - (திருவாய்ப் பாடித் திருவீதிகளிலே) ஸஞ்சரித்த பெருமான்
சித்திர கூடத்து உள்ளான் - (இப்போது) சித்திரகூடத்திலே ஸேவை ஸாதிக்கின்றான்.

விளக்க உரை

புலன்கெழு கோவியர்-கண் மனம் முதலிய இந்திரியங்களைக் கவர்கின்ற அழகிய வடிவுபடைத்த இடைச்சிகளென்கை. (கோபீ) என்ற வடசொல் பன்மையுருபேற்றுக் கோவியர்என்றாயிற்று, “பொலன்கெழு” என்ற பாடமும் உண்டென்று வியாக்கியானத்தினால் விளங்குகின்றது; பொலன்-பொன்மயமான நகைகளினால், கெழு-விளங்குகின்ற=என்க.

English Translation

When the attractive cowherd-dames heard of the child’s wondrous act of sucking the ogress Putana’s poison breast, they worshipped him with fresh flowers saying, “He is verily the husband of Dame Earth, he is the Lord of bee humming lotus-dame Lakshmi”. He resides in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்