விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு* 
  ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
  கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்* 
  சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கூடிய மா மழை காத்த - திரண்ட பெருமழையைத் தடுத்து ரக்ஷித்தவனாயுமிருக்கிற
கூந்தன் என - கூத்துக்களாடின கோபால க்ருஷ்ணனென்று சொல்லும்படியாக
வருகின்றாள் - வருமவள்
சேடு உயர்பூ பொழில் தில்லை சித்திரகூடத்த உள்ளான - இளமை தங்கிய ஓங்கின பூஞ்சோலைகளையுடைய தில்லைத் திருச்சித்திர கூடத்திலுள்ளான்.

விளக்க உரை

ஒக்கலித்திட்டு என்ற வினையெச்சம் மேலே இரண்டாமடியோடு கூடக்கடவது; ஒக்கலித்திட்டாடல்செய்த குதிரை-நடைபழகுவதுபோல ஆடியசைந்துகொண்டுவந்த குதிரையென்க. “நன்மா” என்றது விபரிதலக்ஷணை, ‘நல்லபாம்பு’ என்னுமாபோலே. கூத்தனெனவருகின்றான் இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்திலும் ஈற்றடியில் வருநின்றானென்றும் வருவானென்றும் அருளிச்செய்யக் காண்கையாலே, ஆழ்வார் இத்திருப்பதிக்கொழுந்தருளின ஸமயம் பெருமாளுக்குத் திருவீதிப் புறப்பாடாக இருக்கலாமென்று சிலர் கூறுவதுண்டு.

English Translation

The Lord toddled between the Marudu trees and broke them, he ripped apart the jaws of the horse Kesin, he killed the wrestlers, he protected the cows against a hailstorm with a mountain, he danced with pots. He resides in the cool shade of tall bowers in Tillai Tiruchitrakudam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்