விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த* 
  தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
  கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்* 
  தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெருப்பில் கமழ் சந்தும - மலையிலுள்ள மணங்கமழ்கின்ற சந்தன மரங்களையும்
உந்தி - தள்ளிக்கொண்டு
நிவா வலங்கொள் தெய்வம் புனல் சூழ்ந்து அழகயாய - ‘நிவா’ என்கிற ஆறானது சுற்றிலும் பிரவஹிக்கப் பெற்றதும் புண்ய தீர்த்தங்களால் சூழப்பட்டு  அழகியதுமான

விளக்க உரை

பெரிய பிராட்டியர், பாற்கடல் கடையும்போது அதில் நின்றுந் தோன்றினவளாதலால் “நீர்பயந்த தெய்வத் திருமாமலர்மங்கை” என்றார். முகரம் - மீனுக்கும் முதலைக்கும் பெயர். கௌவை எனினும் கவ்வை எனினும் ஒக்கும்; பேரொலி என்று பொருள். (மதநீர்என்பாருஞ் சிலருண்டு.) சந்து-சந்தநமென்ற வடசொற் சிதைவு. நிலா-வெள்ளாறு; இத்தலத்திற் பெருகுவதொரு நதி.

English Translation

The Lord embraced he bamboo-slender arms of the flower-coiffured cowherd dame Nappinnai. The Makara-fish ocean-born lotus-dame Lakshmi resides on his chest. If you wish to keep him in your hearts forever, go now to Tillai Tiruchitrakudam where the Lord resides, surrounded by the gushing waters of the Vellaru River which brings fragrant sandal wood and elephant tusks as offering to the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்