விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய* 
    தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்* 
    பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*
    புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூ மங்கை தங்கி புலம் மங்கை மன்னி - பெரிய பிராட்டியர்(வலவருகே) தங்கியும் பூமிப் பிராட்டியர் (இடவருகே) பொருந்தியும்
புகழ் மங்கை எங்கும் திகழ - கீர்த்தியாகிற மங்கை எல்லாவிடங்களிலும் வியாபித்து விளங்கவும் பெற்று
புகழ் சேர் சேமம் கொள் - புகழோடு கூடிய க்ஷேமத்தையுடைத்தாய்
பை பூ பொழில் சூழ்ந்த - பரந்து பூத்த சோலைகளால் சூழப்பட்ட

விளக்க உரை

வங்கக் கடல் = வங்கமென்று கப்பலுக்குப் பெயர்; இனி என்ற அமரகோசத்தின்படி பங்கம் என்ற வடசொல் அலைக்கு வாசகமாகையால் அச்சொல்லே வங்கமெனத் திரிந்ததென்று கொண்டு ‘அலைகடல்’ என்று பொருள்கொள்வதும் பொருந்தும். ஸ்ரீதேவி, பூ தேவி, கீர்த்திதேவி என எம்பெருமானுக்கு மூன்று திவ்ய மஹிஷிகளாம்; இவர்களுள் முதல்தேவி எம்பெருமானுடைய வலப்பக்கத்தைப் பற்றினள்; இரண்டாந்தேவி இடப்பக்கத்தைப் பற்றினர்; (கீர்த்தியென்னும்) மூன்றாந்தேவி உலக முழுவதையும் இடமாகப் பற்றினால் என்று ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார்காண்மின். ஸ்ரீதேவி பூதேவிகட்கு வல்லபனென்று உலகம் நிறைந்த புகழ்பெற்றிருக்கிற எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற தில்லைத் திருச்சித்ரகூட மென்றதாயிற்று. சேமம்-க்ஷேமம்.

English Translation

To rid the ocean-girdled Earth of its tyrant king and elevate the souls of the good folk the lord came as parasurama of great penance and merit, and wielded his axe on the kings. Those who wish to make him theirs, -go to Tillai Tiruchitrakudam surrounded by fragrant groves of fame and auspiciousness, where the Lord resides with the lotus-dame on his chest, Earth-dame by his side and Fame dame all around.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்