விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கற்பகக் காவு*  கருதிய காதலிக்கு*
    இப்பொழுது ஈவன் என்று*  இந்திரன் காவினில்*  
    நிற்பன செய்து*  நிலாத் திகழ் முற்றத்துள்* 
    உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்*  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இந்திரன் காலினில் - இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த;
கற்பகம் காவு - கற்பகச் சோலையை;
கருதிய - (தன்வீட்டிற் கொண்டுவைக்க வேணுமென்று) விரும்பிய;
காதலிக்கு - தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு;
இப்பொழுது - இப்பொழுதே

விளக்க உரை

கண்ணபிரான் ஸத்யபாமையின் உகப்புக்காக தேவலோகத்திலிருந்து பாரிஜாத வ்ருக்ஷத்தைக் கொணர்ந்து த்வாரகையில் நாட்டினமை ப்ரஸித்தம். இந்திரன் காவு - கந்தருவரும் மந்தாரம் பாரிஜாதம் ஸந்தானம் கல்பவ்ருக்ஷம் ஹரிசந்தனம் எனத் தேவலோகத்து மரங்கள் ஐந்து; அவ்வைந்தையும் கல்ப வ்ருக்ஷமென்று ஸாதாரணமாக வழங்குதலுமுண்டு; இங்கு பாரிஜாதத்தைக் கற்பகமென்றார். இம்மரங்களில் ஒவ்வொன்றுமே பெருஞ்சோலையாகத் தழைத்திருக்குமாதலால் ‘கற்பகக்காவு’ எனப்பட்டது. ஒரு மரத்தையே காவு என்று கூறியதற்கு ஏற்ப ‘நிற்பன செய்து’ என்று பன்மையாகக் கூறினர்போலும். ஐந்து மரங்களையும் கொணர்ந்தா னென்பாருமுளர். ஈவன் = ஈ பகுதி; அன் - தன்மையொருமை விகுதி; வ் - எதிர்கால இடைநிலை.

English Translation

When his lover Satyabhama desired the Kalpaka tree from Indra’s garden, “Right away”, he said, and planted it in her moonlit yard to satisfy her. The Lord of celestials will come embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்