விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து* 
  தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்* 
  கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்* 
  தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கான் ஆட மஞ்ஞை கணம் ஆட - சோலைகள் அசையும்படியாக
மஞ்சை கணம் ஆட - மயில்களின் கூட்டங்கள் ஆடவும்
மாடே - பக்கத்திலே
தேன் - வண்டுகளானவை

விளக்க உரை

‘இமையோருலகைத் தமதாக ஆளகிற்பீர்!, தில்லைத் திருச்சித்ரகூடஞ் சென்று சேர்மின்கள்; வாடவாடத் தவஞ்செய்யவேண்டா” என்கிறார். வேதங்களில் பி ராமணர்கள் யாகம் செய்தும் தானஞ்செய்தும் தவம்புரிந்தும் பட்டினி கிடந்தும் பேறுபெறப் பார்க்கிறார்கள் என்று ஓதப்பட்டுள்ளது. சரீரத்தை வருத்தப்பட்டுச் செய்யவேண்டியவையாயும், அப்படி செய்தாலும் ‘அது தப்பிற்று; இது தப்பிற்று’ என்று சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்கவேண்டியவையாயுமுள்ள அக்கருமங்களில் கைவைத்து அநர்த்தப்பட்டுப் போவதைக் காட்டிலும் தில்லைத்திருச் சித்திரகூடத்தைச் சென்று சேர்ந்தால் அங்குள்ள எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகி எளிதாக வாழலாமாகையால் அது செய்யுந்களென்று முமுக்ஷூக்களை நோக்கி உபதேசிக்கிறார்.

English Translation

O people who wish to rule over Heaven! There is no need to do severe penance, hurting your flesh, holding your breath and stopping your five senses. Go and offer worship at Tillai Tiruchitrakudam where peacocks dance in the groves, fish dance in the waters, bees dance in the wind, and pennons dance over mansions in the sky.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்