விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*  விசயனுக்கு ஆய்*
  மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்*  குலவு தண் வரைச் சாரல்* 
  கால் கொள் கண் கொடி கைஎழ*  கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்* 
  சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குலவு தண் வரை சாரல் - கொண்டாடத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில்
கால் கண் கொள் கொடி கையெழ - வெற்றிலைக் கால்கள் கணுக்கள் தோறும் கிளைக்கின்ற (வெற்றிலைக்) கொடிகள் மிகுதியாக வளரப் பெற்றதும்
கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் - பாக்கு மரங்களின் இளங்குருத்துகள் வாஸனை வீசப்பெற்ற சுற்றுப் பிரதேசங்களையுடையதும்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு - மீன்கள் துள்ளி விளையாடுகிற அழகிய ஆறானது கழனிகளிலே பெருகப் பெற்றதுமான

விளக்க உரை

மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலரும் எதிரிகளாய் நிறைந்து கிடந்த பாரதயுத்தத்திலே பீஷ்ம த்தோணாதிகளான மஹாவீரர் பிரயோகித்த ஆக்நோயஸ்த்ரம் முதலியவற்றால் அர்ஜூநனது தேர்அழிந்துபோகாதபடி தனது திருவடிகளின் ஸம்பந்தத்தாலே உறுதியாயிருக்கச்செய்து, அந்த அர்ஜூநனால் தாங்கமுடியாத அஸ்த்ர சஸ்த்ரங்கள் வந்தால் தன் மார்பிலே ஏற்றுக் கொள்ளும்படி அவன் தேரின் முன்புறத்திலே ஸாரதியாய்த் தங்கியிருந்து வெற்றி பெறுவித்த வீரன் வாழுமிடம் திருவயிந்திபுரம். அஃது எப்படிப்பட்ட தென்னில் வெற்றிலைத் தோட்டங்களும் பாக்குச் சோலைகளும் நீர்வாய்ப்புள்ள கழனிகளும் நிறையப்பெற்றது.

English Translation

The Lord who drove the chariot in war for Arjuna resides in cool Tiruvayindirapuram where Betel creepers climb over Areca trees and fish dance inebriated in rivers that irrigate the fields.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்