விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்*  விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
    நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்*  மணி வரை நீழல்* 
    அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்*  பெடையொடும் இனிது அமர* 
    செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு*  தண் திருவயிந்திரபுரமே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீள்முடி பொடி செய்த மைந்தனது இடம் - பெரிய முடிகள் பத்தையும் பொடி படுத்தின மிடுக்கையுடைய பெருமானுக்கு இடமாவது;
மணி வரை நீழல் - அழகிய மலையின் நிழலிலே
அன்னம் மா அரவிந்தம் மலர்அமளியில் பெடை யொடும் இனிது அமர - ஹம்ஸங்களானவை பெரிய தாமரைப் பூவாகிய படுக்கையில் தங்கள்  பேடைகளுடனே இனிதாகப் பொருந்தி வாழ்வதற்குப் பாங்காக
செந்நெல் ஆர்குலை கவரி வீசு - செந்நெல் நிறைந்த குலை சாமரம் வீசப்பெற்ற

விளக்க உரை

விலங்கலின் மிசையிலங்கை= ‘விலங்கல்’ என்று மலைக்குப் பெயர்; ஸூவேல பர்வதத்தின் மேலே த்ரிகூடத்தின்மீது இலங்காபுரி அமைக்கப்பட்டிருந்த தென்ப. அப்படிப்பட்ட இலங்கைக்கு அரசனாகையாலே ‘நமக்கு ஒருவராலும் ஒருநாளும் அழிவில்லை’ என்று மார்பு நெறித்துக் கிடந்தவனுடைய முடிகள் பத்தையும் நீறாக்கின பெருமிடுக்கன நித்யவாஸம் பண்ணுமிடம் திருவயிந்திரபுரம். (மணிவரை நிழலித்யாதி.) இத்தலம் மலைசூழ்ந்ததாதலால் அம்மலையினருகே செந்நெற் கழனிகளிலே தாமரைக் தடாகங்களுள்ளன; அங்குள்ள தாமரை மலர்களிரே அன்னப் பறவைகள் துணையோடும் பிரியாதே ரமிக்க, அதற்குப் பாங்காகச் சாமரம் வீசுமாபோலே செந்நெற் கதிர்கள் இனிது வீசுகின்றனவாம் அன்னமாவது, நீரும்பாலும் கலந்திருந்தால் அவற்றைப் பிரித்தெடுப்பதுபோல சாஸ்த்ரங்களில் ஸாரமாயும் அஸாரமாயு முள்ளவற்றைப் பகுத்தறிய வல்லவர்களாயும், “அன்னமதா யிருந்து அங்கு அறநூலுரைத்த” என்கிறபடியே ஹம்ஸரூபியாய் எம்பெருமான் சாஸ்த்ரங்களை யுபதேசத்தாப்போலே சிஷ்யர்களுக்கு சாஸ்த்ரங்களைக் கற்பிப்பவர்களாயும், ஸ்ரீஅன்னம் ஒரு போதும் சேற்றுநீரில் பொருந்தாது” என்கிறபடியே அன்னம் சேற்றில் பொருந்தாப்போலே “பிறப்பாம் பொல்லா வருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்து-அழுந்தார்” என்கிறபடியே ஸம்ஸாரமாகிற பெருஞ்சேற்றிலே பொருந்தாதவர் களாயுமிருக்கிற கூரத்தாழ்வான் போல்வராரான மஹான்களை அன்னமென்கிறது ஸ்வாபதேசத்தில். “பெடையோடும்” என் கையாலே க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்துகொண்டே பகவத் பாகவத விஷயங்களில் ப்ராவண்யமுற்றிருக்கும்படியைச் சொல்லுகிறது. “அரவிந்தத்தமளி” என்றது எம்பெருமானுடையவும் ஆசார்யனுடையவும் பாதாரவிந்தங்களைச் சொன்னபடி.

English Translation

The Lord who destroyed the fortress of Lanka for the sake of his Sita of lightning-thin waist resides in cool Tiruvayindirapuram where in the shade of the mountain, swan-pairs lie on beds of lotus and fertile paddy fields wave whisks.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்