விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூன் உலாவிய மடந்தைதன்*  கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
    கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்*  கவின் ஆரும்* 
    வான் உலாவிய மதி தவழ் மால் வரை*  மா மதிள் புடை சூழ* 
    தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய*  திருவயிந்திரபுரமே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இளகொடியோடும் கான் உலாவிய - இளங்ககொடிபோன்ற பிராட்டியோடகூட   காட்டுக்கொழுந்தருளின
கருமுகில் திரு நிறத்தவன் இடம் - காளமேகம் போன்ற வடிவையுடைய பெருமானுக்கு இடமாவது;
கவின் ஆரும் - அழகு நிரம்பிய
வான் உலாவிய மதிதவழ் மால் வரை மாமதிள் புடை சூழ - ஆகாசத்தில் சஞ்சரிக்கின்ற சந்திரன் தவழப்பெற்ற பெரிய மலையும் பெரிய மதிளும் பக்கங்களில் சூழ்ந்திருக்கப்பெற்றதும்
தேன் உலாவிய செழு பொழில் தழுவிய - வண்டுகள் ஸஞ்சரிக்கின்ற அழகிய சோலைகளால் சூழப்பட்டதுமான

விளக்க உரை

சந்திரமண்டலத்தைளவும் ஓங்கின மலைகளாலும் மதிள்களாலும் பொழில்களாலும் சூழப்பெற்றதாம் இத்தலம், “மால்வரை மாமதிள்” என்றதை உம்மைத் தொகையாகக் கொள்ளாமல் உவமைத் தொகையாகக் கொண்டு, பெரிய மலைபோன்ற மதிள்களாற் சூழப்பெற்றதென்றலுமொன்று.

English Translation

By the words of the hunchback woman the cloud-hued Lord went into exile in the forest with his young wife. He resides in Tiruvayindirapuram where mountains and mansions touch the sky and bees hover over fertile wetland tracts.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்