விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல் இடம் அளந்து*
    ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்*  பொன் மலர் திகழ்*
    வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்*  குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி* 
    தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு*  திருவயிந்திரபுரமே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆங்கு - அவ்விடத்திலேயே
அகல் இடம் அளந்து - பரந்த உலகம் முழுவதையும் அளந்து கொணடவனும்
ஆயர் பூங்கொடிக்கு - அழகிய இடைப்பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்காக
இனம் விடை - ஓரினமான ஏழு ரிஷபங்களையும்
பொருதவன் இடம் - போர்செய்து முடித்த பெருமானுறையும் இடமாவது;

விளக்க உரை

குரங்கு+இனம், குரக்கினம்; குரங்குகளைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம். நின்றவா நில்லா நெஞ்சினை யுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற க்ஷூத்ர பலார்த்திகளான ஸம்ஸாரிகளுக்கும் வாநரங்களுக்கும் ஸாம்யம் பொருந்துமன்றோ: இப்படிப்பட்ட ஸம்ஸாரிகள் விஷய போகங்களிலே மண்டித் திரியாநிற்கச் செய்தேயும் பலங்கனி போன்ற பகவத் குணங்களையும் இடையிடையே அநுபவித்து வாழும்படியைக் கூறியவாறு. வேங்கைமரம், கோங்குமரம், செண்பகமரம் ஆகிய இவற்றின் பூக்கள் பொன்னிறமா யிருக்குமாதலால் ‘ பொன்மலர்திகழ்’ என்றது. இம்மரங்களைச் சொன்னது (ஸ்வாபதேசத்தில்) நெஞ்சைக் கவர்கின்ற விஷயாந்திரங்களைச் சொன்னபடி, “குதிகொடு” என்றதில், குதி-முதனிலைத் தொழிற் பெயர்: “கொம்பேற்றியிருந்து குதி பயிற்றும்” என்றார்பெரியாழ்வாரும்.

English Translation

The Lord who went to Mabali’s sacrifice and measured the Earth, the Lord who subdued seven bulls for the cowherd-dame Nappinnai resides in Tiruvayindirapuram where monkeys in hordes jump on Vengai, Kongu and senbakam trees, raining flowers of gold, then go and eat honey-dripping jackfruit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்